For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்திய நகரங்களில் "கத்திக் குத்து".. பாக். தீவிரவாதிகள் ஈடுபடலாம்... ஐபி எச்சரிக்கை

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவின் முக்கிய நகரங்களில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தக்கூடும் என உளவுத் துறை எச்சரித்துள்ளது.

யூரி தாக்குதலை அடுத்து இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவின் முக்கிய நகரங்களில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தக்கூடும் என உளவுத் துறை எச்சரித்துள்ளது.

A desperate Pakistan may strike at Indian cities, Intelligence Bureau warns

பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் முக்கிய நகரங்களின் போலீஸ் அதிகாரிகளை உஷாராக இருக்குமாறு உளவுத் துறை வலியுறுத்தியுள்ளது.

முக்கிய இடங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களை பாகிஸ்தான் தீவிரவாதிகள் குறி வைக்கக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. ஐஎஸ்ஐஎஸ்-ஜமாத்துல் முஜாஹிதீன் அமைப்பினர் கூட்டாக சேர்ந்த இந்தியாவின் முக்கிய நகரங்களில் கத்தியால் தாக்குதல் நடத்தக்கூடும் என்று உளவுத் துறை அண்மையில் தான் எச்சரித்திருந்தது.

எல்லையில் இந்திய ராணுவ முகாம்கள், சோதனைச்சாவடிகளை பாகிஸ்தான் தீவிரவாதிகள் குறிவைக்கக்கூடும் என்கிறது உளவுத் துறை. நாட்டில் உள்ள ஸ்லீப்பர் செல்களை போலீசார் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என உளவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

English summary
Isolating Pakistan is bound to make them desperate and the country is likely to sponsor a series of attacks on India, intelligence bureau officials have warned.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X