For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஏம்மா அப்படி என்னதான் இருக்கு அதுல? வாட்ஸ்அப்பே கதி என்று இருந்த மணமகள், என்ன ஆச்சு பாருங்க மக்களே!

உத்தரப்பிரதேசத்தில் எந்நமும் வாட்ஸ்அப்பே கதி என்று இருந்த மணமகளால் மணமகன் வீட்டார் திருமணத்தை நிறுத்தியுள்ளனர்.

Google Oneindia Tamil News

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் எந்நமும் வாட்ஸ்அப்பே கதி என்று இருந்த மணமகளால் மணமகன் வீட்டார் திருமணத்தை நிறுத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரப்பிரதேசம் மாநிலம், அம்ரோகா மாவட்டத்தில் உள்ள நவுகன் சதட் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் மெகந்தி. இவரது மகளுக்கும், கமார் ஹைதர் என்பவரது மகனுக்கும் திருமணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

திருமணம் நடைபெறும் தினத்தன்று மணப்பந்தலில் அமர்ந்திருந்தார் பெண். ஆனால் மணமகன் வீட்டில் இருந்து யாரும் வரவில்லை.

பதறிய மணமகள் வீட்டார்

பதறிய மணமகள் வீட்டார்

இதனால் மண்டபத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஏன் மாப்பிள்ளை வீட்டார் வரவில்லை. என்ன ஆனதோ என பதறினர் மணமகள் வீட்டார்.

மணமகளுக்கு வாட்ஸ்அப் பைத்தியம்

மணமகளுக்கு வாட்ஸ்அப் பைத்தியம்

மண்டபத்தில் அனைவரும் கேள்வி கேட்கவும் மணப் பெண்ணின் தந்தை மெகந்தி, மாப்பிள்ளையின் தந்தை ஹைதருக்கு போன் செய்தார். ஆனால், மணப்பெண் அதிக நேரம் வாட்ஸ் அப்பிலேயே மூழ்கி இருப்பதால் தங்களுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

ரூ.65 லட்சம் வரதட்சனை

ரூ.65 லட்சம் வரதட்சனை

இதைக்கேட்டு பெண் வீட்டார் அதிர்ச்சியடைந்தனர்.
இதைத்தொடர்ந்து, வரதட்சனையாக மாப்பிள்ளை வீட்டார் ரூ.65 லட்சம் கேட்டார்கள், அதை மனதில் வைத்தே இப்போது திருமணத்தை நிறுத்தியுள்ளனர் என மெகந்தி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

திருமணத்திற்கு முன்பே

திருமணத்திற்கு முன்பே

ஆனால், மாப்பிள்ளை வீட்டாரோ, பெண்ணுக்கு அதிக நேரம் வாட்ஸ் அப் பயன்படுத்தும் பழக்கம் உள்ளது. திருமணத்திற்கு முன்பாகவே எங்களது உறவினர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அவர் பல்வேறு செய்திகளை அனுப்பியுள்ளார் என குற்றம்சாட்டியுள்ளனர்.

வேதனையில் மணமகள் வீட்டார்

வேதனையில் மணமகள் வீட்டார்

மணப்பெண் வாட்ஸ் அப்க்கு அடிமை ஆனது போல் இருந்ததால் நாங்கள் திருமணத்தை நிறுத்திவிட்டோம் என தெரிவித்தனர். இதனால் கல்யாண கனவுகள் நொருங்க வேதனையில் மூழ்கினர் மணமகள் வீட்டார்.
ஒரு திருமணம் வாட்ஸ் அப்பை காரணம் காட்டி நின்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
A familly called off wedding due to whatsapp. The bride was in whatsapp always.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X