தமிழ்நாட்டுல மனுசனா இருப்பதற்கு பேசாம இந்த ஊர்ல மாடா இருக்கலாம் போலயே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: வெயிலில் இருந்து விவசாயி ஒருவர் தனது சுமை இழுக்கும் காளையை பாதுகாக்கும் நெகிழ வைக்கும் போட்டோ வெளியாகியுள்ளது. அந்த போட்டோ இணையதளங்களில் வைரலாக பரவியுள்ளது.

நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் வெயில் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவே அச்சப்பட்டு வருகின்றனர்.

A farmer had set up a ceiling for his bull ih his bullock

கால்நடைகளும் விலங்குகளும் கூட இந்த வெயிலுக்கு தப்ப முடியவில்லை.
இந்நிலையில் விவசாயி ஒருவர் தான் வளர்த்து வரும் காளையை பாதுகாக்க முடிவு செய்தார். அதற்காக சுமை இழுக்கும் அந்த காளைக்கு தன் மாட்டுவண்டியோடு சேர்ந்தவாறு மேற்கூரையை அவர் அமைத்துள்ளார்.

வெயிலில் பணியில் ஈடுபடும் போதும் அந்த காலை கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பித்து வருகிறது. விவசாயி மாட்டுவண்டியோடு சேர்த்து காளைக்காக அமைத்துள்ள பிரத்தியோக மேற்கூரை படம் இணையதளத்தில் வைரலாகியுள்ளது.

தமிழகம் மட்டுமின்றி டெல்லி, ஹைதராபத், தெலுங்கானா, உள்ளிட்ட மாநிலங்களிலும் வெயில் 110 ஃபாரன்ஹிட்டுக்கு மேல் கொளுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A heat wave affected the several parts of the country. A farmer decided to do something and touching for his bull. He had set up the celing for his bull ih his bullock.
Please Wait while comments are loading...