For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அடக்கொடுமையே.. ஜம்மு காஷ்மீர் சட்டசபை கலைப்புக்கு காரணம் ஒரு ஃபேக்ஸ் மெஷினா?

Google Oneindia Tamil News

Recommended Video

    காஷ்மீரில் சட்டசபை கலைப்புக்கு காரணம் ஃபேக்ஸ் மெஷினா?- வீடியோ

    ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில், மக்கள் ஜனநாயக கட்சி, தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரஸ் ஆகியவை இணைந்து, கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான கோரிக்கையை, ஆளுநர் மாளிகைக்கு நேற்று இரவு ஃபேக்ஸ் மூலம் அனுப்பிவைத்த நிலையில், அது ஆளுநர் மாளிகையால் பெறப்படவில்லை என்பது சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது.

    ஆளுநர் ஆட்சி நடைபெற்ற ஜம்மு காஷ்மீரில், மேற்கண்ட மூன்று கட்சிகளும் இணைந்து ஆட்சிக்கு உரிமைகோரும் முடிவிற்கு வந்தன.

    இதுதொடர்பான கோரிக்கை கடிதத்தை, மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபுபா முப்தி, ஃபேக்ஸ் மூலமாக ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்க முடிவு செய்தார்.

    ஆளுநர் பெறவில்லை

    ஆனால், இந்த கடிதம் ஆளுநர் மாளிகை ஃபேக்ஸ் மெஷினால் ரிசீவ் செய்யப்படவில்லை என்றும், அதற்குள்ளாக சட்டசபையையே கலைத்து ஆளுநர் பரிந்துரை செய்துள்ளார் என்றும் மெகபூபா முப்தி ட்விட்டரில், தெரிவித்துள்ளார். போன் செய்து பார்த்தபோது, அதையும் எடுப்பதற்கு ஆளுநர் மாளிகையில் ஆளில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

    கிண்டல்

    இந்த ட்வீட்டுக்கு பதிலாக தேசிய மாநாட்டு கட்சியின் ஓமர் அப்துல்லா கிண்டலாக ஒரு ட்வீட் வெளியிட்டுள்ளார். அதில் ஆளுநர் மாளிகை ஃபேக்ஸ் மெஷின் செயல்படும் விதம் என்று கூறி அனுப்பப்படும் ஃபேக்ஸ்கள் குப்பை தொட்டிக்கு செல்வதை போல ஜிப் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    திடீர் உத்தரவு

    திடீர் உத்தரவு

    மெகபூபாவின் கோரிக்கை கடிதத்தை ஆளுநர் சத்யபால் மாலிக் பெற்றுக்கொண்டிருக்க கூடும் என்று செய்திகள் வெளியான நேரத்தில்தான் சட்டசபை கலைப்பு தொடர்பான பரிந்துரை ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியானது.

    கூட்டணி ஆட்சி

    கூட்டணி ஆட்சி

    பாஜக-மக்கள் ஜனநாயக கூட்டணி அரசு நடைபெற்ற காஷ்மீரில் கடந்த ஜூன் மாதம் 16ஆம் தேதி, கூட்டணி அரசில் இருந்து பாஜக விலகியது. இதையடுத்து முதல்வர் மெகபூபா முப்தி ராஜினாமா செய்தார். அதன்பின்னர் எந்த கட்சியும் ஆட்சியமைக்க உரிமை கோராததால் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது நினைவிருக்கலாம்.

    English summary
    Amid a political drama that resulted in the dissolution of Jammu and Kashmir assembly, the fax machine at the Jammu and Kashmir Governor's office became an instant hit on the social media.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X