For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அட கடவுளே.. மனுகொடுக்க வந்தவருக்கு நேர்ந்த கதியை பாருங்க மக்களே.. வைரலாகும் வீடியோ!

உத்தரப்பிரதேசத்தில் மனு கொடுக்க வந்த இளைஞரை அதிகாரி ஒருவர் தனது காரின் முன்பக்கத்தில் 4 கிலோமீட்டர் தொங்கியபடி இழுத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    மனுகொடுக்க வந்தவருக்கு நேர்ந்த கதியை பாருங்க மக்களே..

    லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் மனு கொடுக்க வந்த இளைஞரை அதிகாரி ஒருவர் தனது காரின் முன்பக்கத்தில் 4 கிலோமீட்டர் தொங்கியபடி இழுத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    வட்டார வளர்ச்சி அதிகாரி

    வட்டார வளர்ச்சி அதிகாரி

    உத்தரபிரதேச மாநிலம் பரேலி அருகிலுள்ள ராம்நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரிஜ் பால். இவர் அப்பகுதி வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் மனு கொடுக்கச் சென்றார்.

    வழிமறித்த இளைஞர்

    வழிமறித்த இளைஞர்

    அலுவலகத்தில் பிடிஓ இல்லாததால் வெளியே வந்தார். அந்த நேரத்தில் பிடிஓ காரில் ஏறுவதைப் பார்த்த பிரிஜ் பால், காரை வழிமறித்தார். ஆனால் கார் நிற்காததால் அதன் முகப்பில் பற்றி தொங்கினார்.

    4 கிலோ மீட்டர் தூரம்

    4 கிலோ மீட்டர் தூரம்

    ஆனால் அதிகாரியோ காரின் முன்பக்கம் இளைஞர் தொங்குவதை பார்த்துக் காரை நிறுத்தவில்லை. காரை நிறுத்தாமல் 4 கிலோமீட்டர் தொலைவுக்கு ஓட்டிச் சென்றார்.

    வைரல் வீடியோ

    வைரல் வீடியோ

    காரின் முகப்பில் இளைஞர் தொங்கியபடியே செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இதுதொடர்பாக ஆன்லா போலீஸ் நிலையத்தில் பிரிஜ் பால், பிடிஓ இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, முதல் தகவல் அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.

    பரபரப்பு சம்பவம்

    பரபரப்பு சம்பவம்

    இதனிடையே இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு 3 பேர் கொண்ட குழுவை, மாவட்ட ஆட்சியர் வீரேந்திர குமார் சிங் அமைத்துள்ளார். வட்டார வளர்ச்சி அதிகாரி மனு கொடுக்க வந்த இளைஞரை காரில் தொங்கவிட்டபடியே இழுத்துச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    A govt official drives car for 4 kilo meteres with a youth on the bonnet. This video became viral on social media.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X