For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குஜராத் தலைமை செயலகத்திற்குள் புகுந்த சிறுத்தை.. 10 மணி நேர போராட்டம்.. எம்எல்ஏக்கள் வெளியேற்றம்!

குஜராத் தலைமை செயலகத்திற்குள் இன்று அதிகாலை சிறுத்தை ஒன்று புகுந்து இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    குஜராத் தலைமை செயலகத்திற்குள் புகுந்த சிறுத்தை

    காந்தி நகர்: குஜராத் தலைமை செயலகத்திற்குள் இன்று அதிகாலை சிறுத்தை ஒன்று புகுந்து இருக்கிறது.

    குஜராத்தின் காந்தி நகரில் உள்ள தலைமை செயலகத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அதிகாலை 2 மணிக்கு சிறுத்தை ஒன்று அந்த கட்டிடத்திற்குள் புகுந்து இருக்கிறது.

    இதை மீட்க தற்போது மீட்பு படையினர் போராடி வருகிறார்கள். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

    [நாடாளுமன்றம் கூடும் தேதியை மாற்றியது ஏன்... சிறிசேனாவுக்கு சபாநாயகர் கேள்வி!]

    உள்ளே வந்தனர்

    உள்ளே வந்தனர்

    இந்த சிறுத்தையை பிடிப்பதற்காக அங்கு மீட்பு படையினர் சென்று இருக்கிறார்கள். அந்த சிறுத்தையை பிடிக்க அதி நவீன கருவியை பயன்படுத்தி வருகிறார்கள். காலை 3 மணிக்கு தொடங்கிய சிறுத்தையை பிடிக்கும் பணி இப்போது வரை நடந்து வருகிறது.

    பிடிக்க முடியவில்லை

    இதில் 20க்கும் அதிகமான வனப்படையினர் ஈடுப்பட்டு இருக்கிறார்கள். ஆனாலும் இதுவரை அந்த சிறுத்தையை பிடிக்க முடியவில்லை. இதனால் தற்போது அந்த தலைமை செயலகம் முழுக்க ரகசிய கூண்டுகளை அமைத்து இருக்கிறார்கள்.

    வெளியேறினர்

    வெளியேறினர்

    இதன் காரணமாக காலையில் உள்ளே சென்ற சில அதிகாரிகள் வெளியேறி இருக்கிறார்கள். அந்த தலைமை செயலகத்திற்குள் சிறுத்தை இருப்பது தெரியாமல் வேறு ஒரு பாதை வழியாக எம்எல்ஏ ஒருவர் உள்ளே சென்றதாக கூறப்படுகிறது. அவர் உள்ளிட்ட மற்ற அதிகாரிகளும் வெளியேறிவிட்டனர்.

    நிறைய ஆவணங்கள்

    நிறைய ஆவணங்கள்

    அந்த சிறுத்தை தற்போது நிறைய முக்கிய ஆவணங்கள் இருக்கும் பகுதியில் சுற்றி வருகிறது. இதனால் அங்கு பரபரப்பான சூள்நிலை நிலவி வருகிறது. இந்த சிறுத்தை எப்படி உள்ளே வந்தது என்று தெரியாமல் அதிகாரிகள் குழம்பிப் போய் இருக்கிறார்கள்.

    English summary
    A huge leopard broken into Gujarat secretariat - Video.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X