For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இத்தனை நாற்காலிகள் காலியாக இருந்தும் ஓபிஎஸ்ஸுக்கு ஒன்று கூட கிடைக்கவில்லையே!

நிர்மலா சீதாராமன் அலுவலகத்தில் இத்தனை நாற்காலிகள் காலியாக இருந்தும் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லையே.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    நாற்காலிகள் காலியாக இருந்தும் ஓபிஎஸ்ஸுக்கு கிடைக்கவில்லையே!

    டெல்லி: பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அலுவலகத்தில் இத்தனை நாற்காலிகள் காலியாக இருந்தும் ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லையே.

    டெல்லிக்கு நேற்று முன்தினம் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களான கே.பி. முனுசாமி, மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோருடன் சென்றிருந்தார். இந்நிலையில் அவர் டெல்லி சென்றதற்கு பல்வேறு யூகங்கள் கூறப்பட்டன.

    இதற்கு மறுப்பு தெரிவித்த ஓபிஎஸ், தனது சகோதரர் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்றபோது ராணுவ ஹெலிகாப்டர் தந்து உதவியதால் நிர்மலா சீதாராமனை சந்தித்து நன்றி கூற மட்டுமே வந்துள்ளேன். அரசியல் பேச வரவில்லை என்றார்.

    அவமானம்

    அவமானம்

    இந்த பேட்டிக்கு பின்னர் சில நிமிடங்களில் மாநிலங்களவை எம்பி மைத்ரேயனை சந்திக்க மட்டுமே அப்பாயின்மென்ட் வழங்கப்பட்டதாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் டுவீட் செய்திருந்தது. இதனால் தமிழகத்தின் துணை முதல்வரை நிர்மலா சீதாராமன் அவமானம் செய்துவிட்டார் என்று பேசப்பட்டது.

    சத்யபாமா

    இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓபிஎஸ்ஸை சந்திக்க நிர்மலா சீதாராமனுக்கு நேரம் இல்லை என்று கூறிவிட முடியாது. அவர் எம்பி மைத்ரேயனை சந்தித்தார். அதுமட்டுமல்லாமல் எம்பி சத்யபாமாவையும் சந்தித்துள்ளார்.

    பிஸியாக இல்லை

    பிஸியாக இல்லை

    சத்யபாமாவை சந்தித்த போது அவருக்கு பக்கத்தில் உள்ள பெரும்பாலான நாற்காலிகள் காலியாகவே இருந்தன. ஆனால் ஓ.பன்னீர் செல்வத்துக்கு இடம் அளிக்கவில்லை. இது ஏன் என்பது புரியாத புதிராக உள்ளது. மேலும் குறிப்பிட்ட நாளில் மைத்ரேயன், சத்யபாமாவை சந்தித்த நிர்மலா சீதாராமன் ஓபிஎஸ்ஸை சந்திக்க முடியாத அளவுக்கு பிஸியாக இல்லை என்பது தெரிந்துவிட்டது.

    பேசவில்லை

    பேசவில்லை

    அப்படியென்றால் எதற்காக ஓபிஎஸ் புறக்கணிக்கப்பட்டார். இது பெரும் கேள்வியாகவே உள்ளது. நிர்மலா சீதாராமனிடம் அரசியல் பேச வரவில்லை என்றால் அவரை மைத்ரேயனை சந்தித்த போதே சந்தித்திருக்கலாம். இந்த விவகாரத்துக்கு ஆயிரம் அற்தங்கள் கற்பிக்கப்படுகின்றன.

    ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு

    ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக இரு அணிகளாக பிரிந்தது. அதில் ஓபிஎஸ் அணிக்கு சில எம்எல்ஏக்களும் , எம்பிக்களும் ஆதரவு தெரிவித்தனர். அப்படி ஓபிஎஸ்ஸை சந்தித்து ஆதரவு தெரிவித்தவர்களுள் சத்யபாமாவும் ஒருவர்.

    English summary
    Despite there were empty chairs in Nirmala Seetharaman's office, there was no seat for OPS, even ADMK MP Satyabama gets place for meet.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X