For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜீன்ஸ் அணிந்து சபரிமலைக்கு செல்ல முயன்ற பெண்ணை முற்றுகையிட்ட பக்தர்கள்... பத்தனம்திட்டாவில் பதற்றம்

Google Oneindia Tamil News

Recommended Video

    ஜீன்ஸ் அணிந்து சபரிமலைக்கு செல்ல முயன்ற பெண்ணை முற்றுகையிட்ட பக்தர்கள்- வீடியோ

    பத்தனம்திட்டா: ஜீன்ஸ் அணிந்து கொண்டு சபரிமலைக்கு செல்ல முயன்ற பெண்ணை தடுத்து நிறுத்தி பக்தர்கள் முற்றுகையிட்டதால் பத்தனம்திட்டாவில் பதற்றமான சூழல் எழுந்தது.

    சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் 10 வயது முதல் 50 வயதுக்குள்பட்ட பெண்கள் காலங்காலமாக அனுமதிக்கப்படாமல் இருந்தனர். இந்நிலையில் உச்சநீதிமன்றம் அனைத்து வயதுடைய பெண்களையும் சபரிமலைக்குள் அனுமதிக்கலாம் என உத்தரவு பிறப்பித்தது.

    A lady who wears Jeans pant tries to go to Sabarimala

    இதற்கு கடும் எதிர்ப்பு நாடு முழுவதும் பல்வேறு பேரணிகள் நடத்தப்படுகின்றன. கேரள மாநில பெண்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஐப்பசி மாத பூஜைக்காக இன்று சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. 5 நாட்களுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். ஐயப்பன் கோயிலுக்குள் வரும் நவம்பர் 17-ஆம் தேதி முதல் பெண்களை அனுமதிக்க தேவசம் போர்டு அறிவித்துள்ளது.

    [உயிரை விட்டாவது சபரிமலையை காப்பாற்றுவோம்.. கேரள பழங்குடிகள் உறுதி.. பரபரப்பு!]

    எனினும் உச்சநீதிமன்றம் எந்த காலத்தை நிர்ணயிக்காததால் இன்று நடைதிறக்கும் நேரத்தில் பெண்கள் அங்கு செல்லக் கூடும் என்ற அங்கு பரபரப்பு எழுந்தது. இந்நிலையில் இன்று நடை திறக்கப்பட்டது. இதனால் கேரள மாநில பேருந்தில் பம்பா செல்ல பத்தனம்திட்டாவில் பக்தர்கள் காத்திருந்தனர்.

    அப்போது பம்பை செல்லும் பேருந்து ஜீன்ஸ் அணிந்து பெண் லிபி என்பவர் ஏற முயன்றார். அப்போது அவரை பத்தனம்திட்டாவில் பஸ்ஸிலிருந்து பக்தர்கள் இறக்கி விட்டனர். மேலும் அந்த பெண்ணை சபரிமலைக்குச் செல்ல விடாமல் தடுத்து முற்றுகை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பக்தர்களுடன் லிபி கடும் வாக்குவாதம் செய்து வருகிறார். மேலும் பாதுகாப்பு பணிக்காக சென்ற பெண் போலீஸாரும் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

    English summary
    A lady was gharoed by devotees who wears jeans pant and then tries to go to Sabarimala.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X