For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கர்நாடகாவில் கோர விபத்து.. தமிழகத்தை சேர்ந்த 5 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி

கர்நாடகாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 5 பேர் பலியாகியுள்ளனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    கோரமான கார் விபத்தில் 5 பேர் பலி-வீடியோ

    பெங்களூரு: கர்நாடகாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 5 இளைஞர்கள் பலியாகியுள்ளனர்.

    வேலூர் மாவட்டம் ஆம்பூரைச் சேர்ந்த சதாம் உசேன், சதாம், முகமது, ஆசிப், ஷாருக் உள்ளிட்ட 11 பேர் காரில் கோவாவுக்கு சுற்றுலா சென்றனர். நேற்றிரவு கோவாவில் இருந்து புறப்பட்ட அவர்கள் தமிழகத்திற்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.

    அப்போது சித்திரத்துர்கா மாவட்டத்தில் அவர்கள் சென்ற கார் மீது எதிரே வந்த லாரி நேருக்கு நேர் மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொருங்கியது.

    5 இளைஞர்கள் பலி

    5 இளைஞர்கள் பலி

    காரில் இருந்த 5 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 3 பேர் லேசான காயம் அடைந்தனர்.

    25 வயதுக்குட்பட்டவர்கள்

    25 வயதுக்குட்பட்டவர்கள்

    உயிரிழந்த 5 இளைஞர்களும் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். இன்று காலை 5 மணிக்கு இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது.

    உடற்கூறாய்வு

    உடற்கூறாய்வு

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் 5 இளைஞர்களின் உடல்களையும் கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

    தமிழகத்தை சேர்ந்த லாரி

    தமிழகத்தை சேர்ந்த லாரி

    மேலும் விபத்துக்கான காரணம் குறித்தும் விசாரித்து வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய லாரியும் தமிழகத்தை சேர்ந்தது என தெரியவந்துள்ளது.

    கிராம மக்கள் சோகம்

    கிராம மக்கள் சோகம்

    ரம்ஜான் விடுமுறையை கொண்டாடிவிட்டு திரும்பிய போது இந்த சோகம் அரங்கேறியுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 5 பேர் கர்நாடகாவில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    A Lorry and Car hits directly in Karnataka five Tamils killed on the spot.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X