For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தீர்ப்பு எதிராக வந்ததால் ஆத்திரம்.. மூன்று பேருக்கு கத்தி குத்து.. நீதிபதிக்கு முன் வெறிச்செயல்

தீர்ப்பு தனக்கு சாதமாக வராத காரணத்தால் மும்பை நீதிமன்றத்தில் ஒருவர் மூன்று பேரை கத்தியால் குத்தி இருக்கிறார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

மும்பை: தீர்ப்பு தனக்கு சாதமாக வராத காரணத்தால் மும்பை நீதிமன்றத்தில் ஒருவர் மூன்று பேரை கத்தியால் குத்தி இருக்கிறார். இந்த சம்பவம் நீதிமன்றத்தில் இருந்த நீதிபதியின் கண் எதிரே நடந்து இருக்கிறது.

ஹரிசந்திர ஷிர்கர் என்ற இந்த நபர் மூன்று பேரை கத்தியால் குத்தியது மட்டும் இல்லாமல் தான் செய்த செயலுக்கு நியாயம் கற்பித்தும் பேசி இருக்கிறார். மேலும் நீதிபதியின் தீர்ப்புக்கு எதிராகவும் அவர் கருத்து கூறியிருக்கிறார்.

இந்த நிலையில் தற்போது இவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். மும்பை கோர்ட்டில் பட்டப்பகலில் நடந்த இந்த கொடூரமான சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பல வருடமாக நடந்த வழக்கு

பல வருடமாக நடந்த வழக்கு

ஹரிசந்திர ஷிர்கர் என்ற நபர் கடந்த 2009ம் வருடம் மும்பையில் இருக்கும் 'போய்வாடா' நீதிமன்றத்தில் மகேஷ், நந்தேஷ் மற்றும் நந்தேஷின் தம்பி மூன்று பேர் மீது வழக்கு தொடுத்து இருந்தார். இந்த மூன்று பேரும் ஹரிச்சந்திராவை நடுரோட்டில் வைத்து மோசமாக தாக்கி இருந்ததாக அந்த குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் சரியான முடிவு கிடைக்காமல் கடந்த 8 வருடமாக இழுத்தடிக்கப்பட்டு வந்தது.

எதிராக வந்த தீர்ப்பு

எதிராக வந்த தீர்ப்பு

இந்த நிலையில் நேற்று இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி மகேஷ், நந்தேஷ் மற்றும் நந்தேஷின் தம்பி மூன்று பேரும் எந்த விதமான குற்றமும் செய்யவில்லை என்று கூறப்பட்டது. இதையடுத்து வழக்கு தொடுத்த ஹரிஷாந்திர ஷிர்கர் அந்த இடத்திலேயே சத்தம் போட்டு அழ ஆரம்பித்தார். ஆனால் அந்த மூன்று பேரும் இவரை பார்த்து ஏளனமா சிரித்துக் கொண்டு சென்று இருக்கின்றனர்.

மூன்று பேருக்கும் கத்தி குத்து

மூன்று பேருக்கும் கத்தி குத்து

அவர்கள் மூன்று பேரின் ஏளனமான சிரிப்பையும் பொறுத்துக்க கொள்ள முடியாத ஹரிஷாந்திர ஷிர்கர் உடனே மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து அவர்களை குத்தினார். அவர்களுக்கு பாதுக்காப்பாக நின்று கொண்டிருந்த போலீசார்களை தள்ளிவிட்டுவிட்டு அவர் இந்த கொடூர செயலை செய்தார். இந்த சம்பவம் நடந்த போது நீதிபதியும் அதை பார்த்துக் கொண்டு இருந்துள்ளார்.

மருத்துவமனையில் அனுமதி

மருத்துவமனையில் அனுமதி

இந்த நிலையில் தற்போது அந்த மூன்று நபர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் உயிருக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லை என்று கூறப்படுகிறது. ஹரிஷாந்திர ஷிர்கர் இதுகுறித்து ''நான் எதிர்பார்த்த தீர்ப்பு வரவில்லை. குற்றம் செய்த அவர்கள் சிரித்துக் கொண்டு செல்வதை பார்க்க பிடிக்கவில்லை. அதான் கத்தியால் குத்தினேன்'' என்று கூறியுள்ளார்.

English summary
A man named Harishchandra Shirkar in Mumbai stabs 3 in court after Judge acquits them. He attacked them with a knife after they were making their way out of court following their acquittal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X