For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிர்ச்சி வீடியோ..கொஞ்ச நேரத்தில் விபரீதம் ஆகியிருக்கும்.. பேருந்து டயரில் சிக்கிய வாகன ஓட்டி

Google Oneindia Tamil News

Recommended Video

    கேரளாவில் பேருந்து டயரில் சிக்கிய வாகன ஓட்டி..வைரல் வீடியோ

    கோழிக்கோடு: கொஞ்சம் நேரம் பிரேக்கை மிதிக்காமல் இருந்திருந்தால் விபரீதம் ஆகியிருக்கும்.. கனநொடியில் அதிர்ஷ்டவசமாக பேருந்து விபத்தில் இருந்து ஒருவர் கேரளாவில் உயிர் தப்பினார். இந்த சிசிடிவி காட்சிகள் இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    பொதுவாக விபத்துக்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்கள் கவனக்குறைவு தான். இதனால் ஏற்படும் விபரீதங்களை யாராலும் விவரிக்க முடியாது. மிகமோசமான பாதிப்பை பலருக்கும் ஏற்படுத்துகின்றன.

    A Man narrow escape after a private bus hit him yesterday, in Kozhikode

    இந்நிலையில் விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகளை நாம் பார்க்கும் போது மனத்துக்குள் பதற்றத்தையே ஏற்படுத்தும். பார்ப்பவர்களை அதிர்ச்சியில் உறையவைக்கும். அய்யோ கொஞ்சம் ஒரு வினாடி தாமதமாக வந்திருந்தால் தப்பியிருப்பாரே என்று நமக்கு நாமே ஆறுதல் சொல்வோம். அப்படி ஏராளமான விஷயங்களை நாம் பார்த்து இருப்போம்.

    அப்படி ஒரு விபத்து தான் கேரளாவில் நேற்று நடந்தது. கோழிக்கோடு மாவட்டத்தின் எங்கபுழாவில் ஒரு அரசு பேருந்து செல்கிறது. அதன்பின்னர் செல்லும் இருசக்கர வாகனத்தில் வரும் நபர் மீது பின்னால் வந்த தனியார் பேருந்து பயங்கர வேகமாக மோதுகிறது.

    அமித்ஷாவுக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம்...! ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் முடிவுஅமித்ஷாவுக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம்...! ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் முடிவு

    இதில் இருசக்கர வாகனத்துடன் அதில் வந்தவர் டயரில் சிக்கிக் கொள்கின்றார். சில அடிதூரம் இழுத்துச் செல்லப்பபட்ட நிலையில் டயரில் சிக்கியவர் அடிபடாமல் எழுந்து வருகிறார். இதில் பேருந்து ஓட்டுநர் சமார்த்தியமாக செயல்பட்டு பிரேக் அடித்ததால் இருசக்கர வாகனத்தில் வந்தவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    English summary
    WATCH : A Man has narrow escape after a private bus hit him yesterday, in Kozhikode district‘s Engapuzha Kerala
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X