For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திடீரென சுவடே இன்றி வானத்தில் மாயமான பெரிய நட்சத்திரம்.. குழப்பத்தில் விஞ்ஞானிகள்.. என்ன நடந்தது?

Google Oneindia Tamil News

லடாக்: வானத்தில் திடீர் என்று நட்சத்திரம் ஒன்று மாயமாக மறைந்த சம்பவம் வானியல் ஆராய்ச்சியாளர்களை குழப்பத்திற்கும் ஆச்சர்யத்திற்கும் உள்ளாக்கி உள்ளது.

வானத்தில் லட்சம் கோடி நட்சத்திரங்களும், கிரகங்களும், சூரியன்களும் இருக்கிறது. இதில் அவ்வப்போது ஆச்சர்யங்கள், நினைத்து பார்க்க முடியாத மாற்றங்கள், புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்படும்.

இந்த நிலையில்தான் தற்போது வானத்தில் புதிய ஆச்சர்யம் ஒன்று நிகழ்ந்துள்ளது. ஒரு பெரிய ராட்சச நட்சத்திரம் ஒன்று மொத்தமாக மறைந்து காணாமல் போய் உள்ளது.

தமிழகத்தில் இன்றிலிருந்து தொடங்கும் அக்னி நட்சத்திரம்.. 24 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும்! தமிழகத்தில் இன்றிலிருந்து தொடங்கும் அக்னி நட்சத்திரம்.. 24 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும்!

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

பூமியில் இருந்து 75 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் இந்த சம்பவம் நடந்து உள்ளது. அங்கு இருக்கும் கின்மான் டிவார்ப் கேலக்சி என்ற இடத்தில் இந்த நட்சத்திரம் இருந்துள்ளது. இந்த நட்சத்திரத்தை பல்வேறு காரணங்களுக்காக ஐரோப்பாவின் தொலைநோக்கியான யுரோப்பியன் சதர்ன் அப்சர்வேட்டரி டெலிஸ்கோப் (European Southern Observatory's Very Large Telescope) சோதனை செய்து வந்தது.

சோதனை செய்தது

சோதனை செய்தது

இந்த சோதனை நடந்து கொண்டு இருந்த நிலையில், தற்போது அந்த நட்சத்திரம் மொத்தமாக மாயமாக மறைந்து உள்ளது. சோதனை செய்து கொண்டு இருக்கும் போதே திடீர் என்று அந்த நட்சத்திரம் மாயமாகி மறைந்து உள்ளது. இதற்கு என்ன காரணம் என்று இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நட்சத்திரம் மிகவும் பிரகாசமாக இருந்ததாகவும், அழியும் நிலையில் இல்லை என்றும் கூறுகிறார்கள்.

ஆனாலும் மாயம்

ஆனாலும் மாயம்

ஆனாலும் இந்த நட்சத்திரம் மொத்தமாக மாயமாக மறைந்து உள்ளது. இது பல கேள்விகளை சந்தேங்களை எழுப்பி உள்ளது. இது தொடர்பாக வானியல் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி செய்து வருகிறது. அந்த நட்சத்திரம் இறந்திருக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். அதாவது மொத்தமாக பொலிவிழந்து, செயல் இழந்து இருக்கலாம். அதனால் காணாமல் போய் இருக்கலாம் என்கிறார்கள்.

Recommended Video

    உலகில் முதல்முறையாக படத்தில் நடிக்கும் AI Robot Erica
    தொடர்ந்து

    தொடர்ந்து

    இதில் அதிர்ச்சி அளிக்கும் விஷயம் அந்த கின்மான் டிவார்ப் கேலக்சி பகுதியில் அடுத்தடுத்து நிறைய நட்சத்திரங்கள் இப்படி காணாமல் போகிறது. வரிசையாக நிறைய நட்சத்திரங்கள் அங்கு செயல் இழக்கிறது. இதனால் அந்த கின்மான் டிவார்ப் கேலக்சியின் ஆயுள் முடிவிற்கு வருகிறதா என்றும் கேள்விகள் எழுந்துள்ளது. இது தொடர்பாக பல்வேறு நாட்டின் வானியல் அறிஞர்கள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.

    English summary
    A massive star vanished in space suddenly.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X