For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இதயக்கோளாறுடன் பிறந்த அழகான ஆண் குழந்தை... கதறி அழும் தாய்... யாராவது உதவ முடியுமா?

எல்லா அம்மாக்களுக்கும் இருந்த அதே எதிர்பார்ப்பும் மகிழ்ச்சியும் அதேசமயம் நெஞ்சில ஒரு ஓரமாய் ஒளிந்திருக்கும் பயமும் தான் மம்மாவிற்கும் இருந்தது. 10 மாதங்கள் ஒரு நல்ல தாயாக இருக்க தன்னுடைய பலம் முழுவதையும் திரட்டி தனது குழந்தையை நேசிக்கவும் பாதுகாக்கவும் மனதளவில் தயாராகிக் கொண்டிருந்தாள். தாயாகப் போகிற மகிழ்ச்சியும் எதிர்பார்ப்பும் அவளுடைய கண்களில் நிரம்பி வழிந்தன.

மே மாதம் 13ம் தேதி ஒரு அழகிய ஆண் குழந்தைக்கு தாயானாள் மமதா. ஆனால் அவளுடைய ஆசையில் பெரிய இடி ஒன்று விழுந்தது. பிறக்கும்போதே அந்த குழந்தை இதயக் கோளாறுடன் பிறந்தது. நொறுங்கிப் போனாள் மமதா. அந்த குழந்தைக்கு இருதய கோளாறு இருப்பதை அறிந்தவுடன் அவளுடைய கனவுகள் தூள் தூளானது. அவள் சேர்த்து வைத்த பலம் முழுவதும் கரைந்து மனதளவில் மிகவும் நொறுங்கிப் போனால். அவளுடைய கண்களில் கண்ணீர் ஆறாக ஓடியது.

பிறந்த மறுநாளே அந்த குழந்தையை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். அந்த குழந்தையால் சுவாசிக்க முடியவில்லை. ஆகவே அந்த குழந்தை எளிதாக சுவாசிக்க வெண்டிலேட்டரில் வைத்தனர். இதனால் அந்த சிறு இதயம் மென்மையாக துடித்துக் கொண்டிருந்தது.

ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை பாலூட்டுவதற்காக மமதா தீவிர சிகிச்சை அறைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டாள். குழந்தை சரியாக பால் குடிக்க மறுத்து அழத் தொடங்கினான். உடனே மமதாவும் அறையில் இருந்து வெளிவர வேண்டி இருந்தது. "என் குழந்தை வீறிட்டு அழுவதை என்னால் காண முடியவில்லை, அழுகையையும் நிறுத்த முடியவில்லை, என்னால் இந்த வலியைத் தாங்க முடியவில்லை", என்று நர்சிடம் கூறி அழுதாள் மமதா.

மறுபடியும் குழந்தை வெண்டிலேட்டரில் வைக்கப்பட்டது. மமதாவின் குழந்தை பிறப்பிலேயே இதய கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு உடனடியாக இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.

அறுவை சிகிச்சையை ஏற்றுக் கொள்வதற்கான வளர்ச்சியைக் கூட அந்த குழந்தை எட்டவில்லை. ஆனால் அவனது உயிரை காப்பாற்ற இந்த அறுவை சிகிச்சையை உடனடியாகச் செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். பிறந்த குழந்தையைக் கைகளில் கூட இன்னும் சரியாக ஏந்தவில்லை. அதற்குள் அறுவை சிகிச்சையா என்று மமதா பயந்து கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறாள். இது மட்டுமல்ல அவளின் கண்ணீருக்கான காரணம். இந்த அறுவை சிகிச்சையை மேற்கொள்ள 5 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என்று மருத்துவமனை கூறியுள்ளது. இவளுடைய குடும்பம் இதுவரை செய்த சிகிச்சைக்காக தனது முழு பணத்தையும் செலவு செய்து விட்டது. ஒவ்வொரு நாளும் தீவிர சிகிச்சை பிரிவில் ரூபாய் 25,000/- செலவாகிறது. இதனால் இவர்களின் மொத்த சேமிப்பும் கரைந்து விட்டது.

"என்னுடைய கணவர் DTH ஆப்பரேட்டராக பணி புரிந்து வருகிறார். அவரால் சில நாட்களில் பல லட்சம் ரூபாய் சம்பாதிக்க இயலாது", என்று மமதா கூறுகிறாள். இதனைக் கண்ட இவரின் மைத்துனர் சிகிச்சை செலவிற்காக 1.5 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். தன்னுடைய மைத்துனர் அவரின் மனைவியின் நகைகளை விற்றுத்தான் இந்த பணத்தை வழங்கி இருப்பதாக மமதா கூறுகிறார். அவரால் இதற்கு மேல் பணம் தர இயலாது. எங்களுக்கு இப்போது வேறு வழி இல்லை என்று அழுகிறார். பிறந்து 15 நாட்களே ஆன குழந்தையை எப்படியாவது பிழைக்க வைக்க வேண்டும் என்று போராடி கொண்டிருக்கிறார் இந்த தாய்.

இவருக்கு தேவை எல்லாம் அந்த குழந்தைக்கு நீண்ட ஆயுள் மற்றும் அழியாத புன்னகை மட்டும் தான்.

இந்த குழந்தைக்கும் தாய்க்கும் நீங்கள் உதவ வேண்டுமா? உங்களால் முடிந்த உதவியைச் செய்யுங்கள்..

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X