For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஊரில் உள்ள ஒரே முஸ்லீம் குடும்பம் நீங்கள்தான்.. பாகிஸ்தானுக்கு செல்லுங்கள்.. ஹரியானாவில் கொடூரம்

ஹரியானாவில் ஒரு முஸ்லீம் குடும்பம் சிலரால் மோசமாக கொடுமைப்படுத்தப்பட்டு இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சண்டிகர்: இந்துத்துவா அரசியலுக்கு எதிராக பேசும் மக்களை நாட்டை விட்டு வெளியேறி பாகிஸ்தானில் குடியேறும்படி கடந்த சில மாதங்களாக சிலர் கூறினார்கள். பொதுவாக பிரபலங்கள் பலர் இப்படி தாக்கப்பட்டார்கள்.

சமீப காலமாக இது கொஞ்சம் குறைந்து இருந்தது. இந்த நிலையில் ஒரு முஸ்லீம் குடும்பம் இந்த தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது.

ஹரியானாவில் இருக்கும் அந்த குடும்பம் அங்கு இருக்கும் சிலரால் துன்புறத்தப்படுகிறது. அவர்களை பாகிஸ்தான் செல்ல சொல்லி அவர்கள் தொல்லை கொடுத்து வருகிறார்கள்.

300 வருடம்

300 வருடம்

ஹரியானா அருகில் ஜோஷி என்ற ஜாட் இன மக்களின் கிராமத்தில் சுரேஷ் அல்வி என்பவரின் குடும்பம் வசித்து வருகிறது. 300 ஆண்டுகளாக அந்த முஸ்லீம் குடும்பம் அங்கு வசித்து வருகிறது. அந்த கிராமத்தில் முதலில் குடியேறியது அவர்களின் முன்னோர்கள் என்று கூறப்படுகிறது.

முஸ்லிம் குடும்பம்

முஸ்லிம் குடும்பம்

அவர்கள் முதலில் குடியேறிய பின் அங்கு நிறைய முஸ்லீம் குடும்பம் குடியேறி இருக்கிறது. ஆனால் சுதந்திரத்திற்கு பின் அங்கு ஜாட் இன மக்கள் குடியேற தொடங்கி இருக்கிறார்கள். இந்த நிலையில் தற்போது அங்கு இருக்கும் ஒரே முஸ்லீம் குடும்பம் சுரேஷ் அல்வியுடையது மட்டுமே.

பாகிஸ்தான் போ

பாகிஸ்தான் போ

இதனால் அந்த குடும்பம் தற்போது மிரட்டப்பட்டு வருகிறது. அங்கு இருக்கும் இந்துத்துவா செயற்பாட்டாளர் ஜெய்வீர் என்பவர் அந்த குடும்பத்தை பாகிஸ்தான் செல்ல சொல்லி இருக்கிறார். அவருடன் இன்னும் சிலரும் வந்து மிரட்டியுள்ளனர். இல்லையென்றால் அந்த வீட்டை கொளுத்திவிடுவோம் என்றும் கூறியுள்ளனர்.

போலீஸ்

போலீஸ்

தற்போது போலீஸ் அவர்களை கைது செய்து இருக்கிறது. இனி இது போன்ற சம்பவம் நடக்காது என போலீஸ் வாக்குறுதி கொடுத்து இருக்கிறது. மேலும் அந்த குடும்பத்திற்கு தக்க பாதுகாப்பு கொடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

English summary
A Muslim family in Chandigarh asked to go to Pakistan by goons. The family of Suresh Alvi forced by group of Hindutuva people to move to Pakistan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X