For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கார் இருந்தாதான் குடும்பம் நடத்துவாராம்.. கட்டியதும் கறார் காட்டிய மாப்பிள்ளைக்கு 'மாமனார் வீடு'!

கல்யாணம் முடிந்தவுடன் வரதட்சணையாக கார் கேட்ட கொல்லத்தை சேர்ந்த மாப்பிள்ளை ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    கார் இருந்தாதான் குடும்பம் நடத்துவாராம்..வீடியோ

    கொல்லம்: கல்யாணம் முடிந்தவுடன் வரதட்சணையாக பெண் வீட்டாரிடம் கார் கேட்ட மாப்பிள்ளை ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். கொல்லத்தை சேர்ந்த பிரணவ் என்ற அந்த புது மாப்பிள்ளை இதனால் கல்யாணம் முடிந்த கையோடு சிறையில் அடைக்கப்பட்டார்.

    இவர் கார் கேட்டு அந்த பெண்ணை மோசமாக திட்டியதாக கூறப்படுகிறது. மேலும் பெண் வீட்டாரிடமும் இவர் கார் கேட்டு சண்டை போட்டு இருக்கிறார்.

    இந்த பிரச்சனை இரு வீட்டாருக்கும் இடையில் பெரிய சண்டையாக மாறிய காரணத்தால் அந்த மாப்பிள்ளை மீது போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    வரதட்சணை கார் எங்கே

    வரதட்சணை கார் எங்கே

    கேரள மாநிலத்தில் இருக்கும் கொல்லத்தை சேர்ந்தவர் பிரணவ். 30 வயது நிரம்பிய இவருக்கும் பக்கத்து ஊரை சேர்ந்த பெண் ஒருவருக்கும் நேற்று திருமணம் நடந்தது. திருமணத்திற்கு முன் அந்த பெண்ணின் வீட்டார் மாப்பிள்ளையிடம் கார் வாங்கி தருவதாக கூறியிருக்கிறார்கள். ஆனால் கல்யாணத்தின் போது வந்த வரதட்சணை பொருட்களில் கார் இல்லாமல் போய் இருக்கிறது. இதுகுறித்து மாப்பிள்ளை வீட்டார் அந்த பெண்ணிடம் விசாரணை செய்து இருக்கின்றனர்.

    கார் காரணமாக சண்டை

    கார் காரணமாக சண்டை

    மாப்பிள்ளை அந்த பெண்ணிடம் இதுகுறித்து கோபமாக விசாரித்து இருக்கிறார். வரதட்சணையாக கேட்ட கார் எங்கே என்று மாப்பிள்ளை கேட்டதற்கு அந்த பெண்,இங்கு காரை நிறுத்த போதிய இடம் இல்லாததால், எங்கள் வீட்டில் நிறுத்தி இருக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார். எங்கள் வீட்டில் காரை கேட்டு வாங்கி கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் அந்த பெண்ணுக்கும், மாப்பிள்ளைக்கும் இடையில் சண்டை வந்து இருக்கிறது. அந்த குடும்பமே சேர்ந்து அந்த பெண்ணை திட்டியுள்ளது.

    பெண் வீட்டாருடன் சண்டை

    பெண் வீட்டாருடன் சண்டை

    இந்த நிலையில் அந்த பெண் வீட்டார் வரவேற்பு நிகழ்ச்சிக்காக மாப்பிள்ளை வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது அந்த பெண், மாப்பிள்ளை வீட்டில் நடந்த விஷயங்கள் அனைத்தையும் கூறியிருக்கிறார். இதன் காரணமாக மாப்பிள்ளை வீட்டாருக்கும் பெண் வீட்டாருக்கும் இடையில் சண்டை வந்து இருக்கிறது. மாப்பிள்ளை கார் கொடுத்தால் தான் குடும்பம் நடத்த முடியும் என்று கூறி அசிங்கமான வார்த்தைகளில் பேசி இருக்கிறார். இந்த சண்டை சில மணி நேரத்தில் பெரிய பிரச்சனை ஆகி இருக்கிறது.

    மாப்பிள்ளை கைது

    மாப்பிள்ளை கைது

    இந்த நிலையில் பெண்ணின் சோகமான நிலையை சகித்துக் கொள்ள முடியாத தந்தை கொல்லம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த மாப்பிள்ளையின் மீது வரதட்சணை கொடுமையின் கீழ் வழக்கு பதியப்பட்டது. மேலும் மாப்பிள்ளையின் தம்பி மற்றும் தந்தையின் மீதும் வழக்கு பதியப்பட்டது. இந்த நிலையில் மாப்பிள்ளை உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அந்த பெண்ணை அவரது பெற்றோர் மீண்டும் பிறந்த வீட்டிற்கே அழைத்து சென்றனர்.

    English summary
    A new arrested in Kollam over dowry dispute. The groom has wanted car as the dowry and he shouted at bride. Police filed complaint against him and arrested him.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X