For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பணியிடத்தில் பாலூட்டி..கடமையையும் தாய்மையையும் வெளிப்படுத்திய பெண் காவலர்.. குவியும் பாராட்டு!

Google Oneindia Tamil News

காந்தி நகர்: பணியிடத்தில் பாலூட்டி, தாலாட்டி கடமையையும் தாய்மையையும் ஒரு சேர வெளிப்படுத்திய பெண் காவலருக்கு பாராட்டுகள் குவிகின்றன.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நாளை இந்தியாவுக்கு வருகை தருகிறார். அவர் நேராக அகமதாபாத்திற்கு வந்து அங்கிருந்து சபர்மதி ஆசிரமத்திற்கு செல்கிறார். பின்னர் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலை மனைவி மெலானியாவுடன் சுற்றி பார்க்கிறார்.

இந்த பயணத்தின் போது டிரம்புடன் மனைவி மெலானியா, மகள் இவான்கா, மருமகன் ஜெரெட் குஷ்னர் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்டோர் வருகை தருகின்றனர்.

காந்தி

காந்தி

ஆக்ராவிலிருந்து இவர்கள் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். அங்கு 25-ஆம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்திக்கிறார்கள். பின்னர் அங்கு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து காந்தியின் சமாதியான ராஜ்காட்டுக்கு சென்று அஞ்சலி செலுத்துகின்றனர்.

டிரம்ப்

இரு தினங்களுக்கு இந்தியாவுக்கு வருகை தரும் டிரம்ப் இங்கு 36 மணி நேரம் மட்டுமே தங்குகிறார். இதையொட்டி குஜராத் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அகமதாபாத்தில் வைசாட் பகுதியில் பெண் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கடமை

கடமை

அப்போது சங்கீதா பார்மர் என்ற பெண் காவலர் தனது 1 வயது குழந்தையை தாலாட்டி பாலூட்டி கொண்டிருந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில் பணியின் போது ஒரு வயது குழந்தையை பார்த்து கொள்வது என்பது சற்று சிரமம்தான். ஆனால் தாயாகவும் காவலராகவும் எனக்கு இருக்கும் கடமைகளை செய்ய வேண்டியது என்னுடைய பொறுப்பு.

தாலாட்டி

தாலாட்டி

என் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை. அதனால் இன்று என்னுடனே வைத்துக் கொண்டேன். அவனுக்கு பணியின் போது இடை இடையே பாலூட்டினேன் என்றார். பணியிடத்தில் பாலூட்டி, தாலாட்டி கடமையையும் தாய்மையையும் ஒரு சேர வெளிப்படுத்திய பெண் காவலருக்கு பாராட்டுகள் குவிகின்றன.

English summary
Sangita Parmer, a police constable is performing her duties at Visat, Ahmedabad, with her 1 year old son.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X