For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எக்ஸிட் போல்களை விடுங்க பாஸ்... இந்த க்யூட் பப்பி சொல்லும் குஜராத் ஜோசியத்தை கேளுங்க!

குஜராத் தேர்தல் முடிந்து எக்ஸிட் போல்களும் வெளியாகியுள்ள நிலையில், க்யூட் பப்பி ஒன்று சொல்லும் தேர்தல் ஜோசியம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    இந்த க்யூட் பப்பி சொல்லும் குஜராத் ஜோசியத்தை கேளுங்க!- வீடியோ

    டெல்லி : குஜராத், ஹிமாச்சல் பிரதேசத்தில் பாஜக ஆட்சிஅமைக்கும் என்று வாக்குப்பதிவிற்கு பிந்தைய கருத்துகணிப்புகள் தெரிவித்துள்ள நிலையில், பாஜகவின் ஐடி விங் பொறுப்பாளர் அமித் மால்வியா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு க்யூட் பப்பியின் தேர்தல் கணிப்பு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள குஜராத் மற்றும் ஹிமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்துள்ளன. டிசம்பர் 18ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில் நேற்று மாலையில் பல்வேறு டிவி சேனல்கள் தேர்தலில் எந்த கட்சிக்கு வெற்றி என்ற கருத்துக்கணிப்புகளை வெளியிட்டன.

    பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் ஹிமாச்சல பிரதேசத்தில் பாஜக வெற்றி பெறும் என்றும், குஜராத் தேர்தலில் பாஜக 108 முதல் 111 இடங்கள் வரை பெற்று ஆட்சியை மீண்டும் தக்க வைத்துக் கொள்ளும் என்று முடிவுகளை வெளியிட்டுள்ளன. இதனால் பாஜகவின் வெற்றி உறுதியான மகிழ்ச்சியில் உள்ளனர் அந்தக் கட்சியினர்.

    குஜராத் தேர்தல் கணிக்கும் பப்பி

    குஜராத் தேர்தல் கணிக்கும் பப்பி

    இந்நிலையில் க்யூட் பப்பி ஒன்று குஜராத் தேர்தல் குறித்து ரியாக்ஷன் செய்யும் வீடியோவை பாஜகவின் ஐடி பிரிவின் பொறுப்பாளர் அஜித் மால்வியா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ஒரு பெண் கையில் வைத்திருக்கும் அந்த பப்பி குஜராத் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள், மோடி வெற்றி பெறுவாரா என்று கேட்க இரண்டு கைகளையும் தூக்கி ஆட்டுகிறது அந்த பப்பி.

    காங்கிரஸ் என்றதும் பாவமாக பார்க்கும் பப்பி

    காங்கிரஸ் என்றதும் பாவமாக பார்க்கும் பப்பி

    அடுத்ததாக காங்கிரஸ் கட்சி வெற்று பெறுமா ராகுல் காந்தி வருவாரா என்று கேட்க அதற்கு அமைதியாக இருக்கிறது பப்பி. மீண்டும் அந்த பப்பியிடம் டிசம்பர் 18 தேர்தல் முடிவு மோடிக்கு சாதகமாக இருக்குமா என்று கேட்டால் உற்சாகமாக கைகளை அசைத்து காட்டுகிறது.

    ஃபுட்பாலில் அறிமுகமான பிராணிகளின் கணிப்பு

    ஃபுட்பாலில் அறிமுகமான பிராணிகளின் கணிப்பு

    செல்லப்பிராணிகளின் ஆருடத்தை முதன்முதலில் அறிமுகப்படுத்தியது கால்பந்து போட்டிகளே. 2010ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பால் என்ற ஆக்டபஸ் எந்த அணி வெல்லும் என்று செய்த கணிப்பு பிரபலமடைந்தது.

    பாண்டா கரடி ஆருடம்

    பாண்டா கரடி ஆருடம்

    இதே போன்று நெல்லி என்ற யானை உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் அமெரிக்கா துவக்க ஆட்டத்தில் வெற்றி பெறும் என்று கணித்தது. யானை எந்த அணிக்கு ஆதரவாக பந்தை உருட்டிப் போடுகிறதோ அந்த அணியே வெற்ற பெறும் என்று அப்போது கணிக்கப்பட்டது. இதே போன்று கங்காரு, பன்றிக்குட்டி, பான்டா கரடிகள் என பல பிராணிகளின் கணிப்புகள் கால்பந்து போட்டிகளின் போது அரங்கேறும். இந்த வரிசையில் முதன்முறையாக தேர்தல் பற்றி பப்பி கணிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

    English summary
    A Puppy's election prediction of Gujarat goes viral in social media, as the puppy enthusiatically raising hands for Modi but no reply for Congress victory.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X