For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சேது சமுத்திரத் திட்டத்தில் ஜெயலலிதாவின் பல்டி: ஆ.ராசா தாக்கு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

A Raja slams Jaya for her stand in Sethu project
கரூர்: சேது சமுத்திர திட்டத்தை தேர்தலின் போது ஆதரித்த ஜெயலலிதா, முதல்வர் ஆன பின்பு அதை எதிர்ப்பது எந்த வகையில் நியாம் என முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார்.

கரூர் மாவட்ட திமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்க நாள் பொதுக் கூட்டம், கரூர் 80 அடி சாலையில் நடைபெற்றது.

இந்த பொதுக் கூட்டத்துக்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் பாலச்சந்திரன் தலைமை வகித்தார்.

இந்த கூட்டத்தில் திமுக கொள்கை பரப்பு செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா கலந்து கொண்டு பேசியதாவது,

மொழிப் போர் தியாகிகளுக்கான வீர வணக்க நாள் பொதுக் கூட்டத்தினை நடத்திட திமுகவுக்குத்தான் உரிமையும், தகுதியும் உள்ளது, மற்ற கட்சிகளுக்கு அது இல்லை.

இந்த பிரச்னை 1937 ல் ஆரம்பித்தது. இது பற்றி பலருக்கும் தெரியாது. அதிமுகவை சேர்ந்தவர்கள் மொழிப் போர் தியாகிகள் குறித்தும், மொழிக்காக நடந்த போராட்டங்கள் குறித்தும் கூற முடியுமா ? மொழிப் போர் போராட்டங்களில், அனைத்து கட்ட போராட்டங்களிலும் கலந்து கொண்டவர் திமுக தலைவர் கலைஞர் தான்.

அதிமுக தனது தேர்தல் அறிக்கையின் போது, சேது சமுத்திர திட்டத்தை கொண்டு வருவோம் என்றனர். கொண்டு வந்தே திரூவோம் என்றனர். ஆனால், ஆட்சிக்கு வந்ததும், இது இந்துக்களுக்கு எதிரானது என நீதிமன்றத்தில் பல்டி அடிக்கின்றனர்.

தேர்தல் அறிக்கையில் அந்த திட்டம் வேண்டும் என அறிவித்து விட்டு முதல்வரானதும் ஜெயலலிதா எதிர்க்கின்றார் என ஜெயலலிதா மீது ஆ.ராசா குற்றம் சாட்டினார்.

English summary
Former union minister A Raja has slammed CM Jayalalitha for her comments and stand in Sethu project
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X