For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என்னை மன்னித்துவிடுங்கள்.. திருடிய நகைகளை மன்னிப்பு கடிதத்துடன் திருப்பி கொடுத்த மிஸ்டர்.திருடன்!

கேரளாவில் ஒரு வீட்டில் கொள்ளையடித்த திருடன், மீண்டும் நகைகளை மன்னிப்பு கடிதத்துடன் திருப்பி அளித்து இருக்கிறான்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளாவில் ஒரு வீட்டில் கொள்ளையடித்த திருடன், மீண்டும் நகைகளை மன்னிப்பு கடிதத்துடன் திருப்பி அளித்து இருக்கிறான்.

ஆலப்புழா அருகே இருக்கும் அம்பலப்புழாவில் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. கருமாடி என்ற பகுதியில் உள்ள, மது குமார் தன்னுடைய குடும்பத்துடன் கடந்த செவ்வாய் கிழமை திருமணம் ஒன்றிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் கதவை மறந்து பூட்டாமல் சென்றுள்ளார்.

A robber in Kerala returned the stolen gold with a beautiful apology letter

பின் இரவுவீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டில் நகை திருடு போய் இருப்பதை கண்டுபிடித்து இருக்கிறார். சுமார் 3 பவுன் நகை காணாமல் போய் இருக்கிறது. இதையடுத்து அவர் போலீசுக்கு தகவல் அளித்துள்ளார்.

அதோடு தனக்கு யார் மேல், சந்தேகம் இருக்கிறது என்றும் கூர் போலீசிடம் கூறியுள்ளார். இதையடுத்து போலீஸ் அவர்கள் கொடுத்த புகாரின் அடைப்படையில் விசாரிக்க தொடங்கியுள்ளனர். புதன் கிழமை அவர் புகார் அளித்துள்ளார்.

இந்த நிலையில் அதற்கு அடுத்த நாளே, வியாழக்கிழமை அவர்கள் வீட்டின் வாசலில் காணாமல் போன மொத்த நகையும் இருந்துள்ளது. அதில் ஒரு கடிதமும் இருந்துள்ளது.

அதில் ''என்னை மன்னித்துவிடுங்கள். பெரிய பணத்தேவை இருந்ததால் இப்படி செய்துவிட்டேன். இனி இப்படி திருட மாட்டேன். எனக்கு எதிராக போலீசில் புகார் எதுவும் அளிக்க வேண்டாம்.'' என்று மலையாளத்தில் எழுதியுள்ளார். இதனால் வீட்டின் உரிமையாளர், போலீசில் அளித்த புகாரை வாபஸ் வாங்கியுள்ளார்.

English summary
A robber in Kerala returned the stolen gold with a beautiful apology letter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X