For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

-45 டிகிரிக்கு கீழ் நடுங்கும் குளிர்.. தியானம் செய்து சறுக்கி விளையாடும் சாது.. வைரல் வீடியோ

Google Oneindia Tamil News

Recommended Video

    -45 டிகிரிக்கு கீழ் நடுங்கும் குளிர்.. தியானம் செய்து சறுக்கி விளையாடும் சாது.. வைரல் வீடியோ

    டெல்லி: இமயமலையில் -45 டிகிரிக்கு கீழ் நடுங்கும் குளிரில் காலை பிரார்த்தனைக்காக வந்துள்ள சாதுவை அங்கிருந்த ராணுவ வீரர் வீடியோவாக எடுத்துள்ள காட்சிகள் வைரலாகின்றன.

    இமயமலையில் எப்போதும் வெப்பநிலை மைனஸிலேயே இருக்கும். அந்த குளிரில் நாம் அணியும் ஆடைகளுடன் செல்வது என்பது மிகவும் கடினம். இதனால் குளிரை தாங்கும் பிரத்யேக ஆடைகளை அணிய வேண்டும்.

    A sadhu prays in -45 degree temperature in Himalayas

    இது போன்ற குளிரால் எல்லையில் பாதுகாப்பு பணியில் இருக்கும் வீரர்கள் உறைந்த காட்சிகள் சமூகவலைதளங்களில் பரவியதை நாம் அறிவோம்.

    குளிருக்கான பிரத்யேக ஆடைகளை அணிந்திருந்தாலும் குளிர் அதிகமாகவே உணரப்படும் என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இமயமலையில் -45 டிகிரிக்கும் குறைவாக வெப்பநிலை இருந்தது.

    இந்த கடுங்குளிரில் சாது ஒருவர் எவ்வித ஆடைகளுமின்றி, அதாவது அந்தரங்க உறுப்பை மறைக்கும் சிறிய ஆடையை தவிர வேறு ஏதும் அணியாமல் சாது ஒருவர் வந்தார். அவருடன் ஒரு நாயும் வந்தது.

    அவர் அந்த கடுங்குளிரில் எதற்காக வந்தார் தெரியுமா. தியானம் செய்வதற்காகவே வந்தார். கையில் ஊன்றுகோலுடன் வந்த அவர் சிறிது நேரம் அமர்ந்து தியானம் செய்தார்.

    பின்னர் அவர் சென்றுவிட்டார். இந்த வீடியோவை ராணுவ வீரர் ஒருவர் எடுத்துள்ளார். அது போல் இன்னொரு வீடியோவில் லேசான வெயில் இருக்கிறது. அதில் சாது பனிச்சரிவில் சறுக்கி ஆனந்தமாக விளையாடும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இந்த இரு வீடியோக்களும் வைரலாகி வருகிறது.

    சப் ஜீரோ வெப்பநிலையில் ஒருவர் உயிர் வாழ்வது என்பது கடினமான ஒன்று என்பதை நாம் அறிந்துள்ளோம். ஆனால் இவர் இப்படி சர்வசாதாரணமாக இருப்பது அதிசயமாக இருக்கிறது.

    English summary
    A Sadhu in -45 degree temperature in Himalayas came for morning prayers with a dog. The video was captured by an army personnel.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X