For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெங்களூருக்கு புதிய மேயர் தேர்வு! விரைவில் பதவியேற்பு

பெங்களூரு மேயராக சம்பத் ராஜ் என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

பெங்களூரு: பெங்களூர் மேயராக சம்பத் ராஜ் என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூரு பெருநகர மாநகராட்சி மேயர் தேர்தல் இன்று நடைபெற்றது. இந்ததேர்தலில் வாக்களிக்க 266 பேர் தகுதி பெற்றனர்.

A Tamil named Sampath Raj elected as Bengaluru Mayor

மேயர் தேர்தலில் காங்கிரஸ் - மதசார்பற்ற கூட்டணி சார்பில், சம்பத் ராஜ் என்பவர் போட்டியிட்டார். அவருக்கு சுயேட்சை வேட்பாளர்களும் ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில் சம்பத் ராஜ் 139 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, இவர் டிஜேஹள்ளி வார்டு கவுன்சிலராக 2 முறை வெற்றி பெற்றவர்.

சம்பத் ராஜ், பெங்களூருவின் 51வது மேயராக பதவியேற்க உள்ளார். துணை மேயராக மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் பத்மாவதி நரசிம்மமூர்த்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தை போல பெங்களூரில் 5 ஆண்டுகளுக்கு ஒரே மேயர் என்ற நடைமுறை கிடையாது. ஆண்டுக்கு ஒருமுறை மேயரும், துணை மேயரும் கவுன்சிலர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மாற்றப்படுவது வழக்கம்.

English summary
A congress candidate named Sampath Raj has elected as Bengaluru Mayor. He got 139 votes in the election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X