For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஹெட்போனில் பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்த சிறுமியை தூக்கி சென்ற சிறுத்தை.. விபரீதம்

Google Oneindia Tamil News

டேராடூன்: உத்தரகாண்ட மாநிலம் நைனிடால் மாவட்டத்தின் ராம்நகர் பகுதியில் ஹெட்ஃபோனில் பாட்டு கேட்டுக்கொண்டிருந்த 13 வயது சிறுமியை தாக்கி தூக்கிச்சென்ற சிறுத்தை கடித்துக் கொன்றது.

உத்தரகாண்ட மாநில நைனிடால் மாவட்டத்தின் ராம்நகர் பகுதியில் குமாவோன் வனப்பகுதிக்கு உட்பட்ட சுனாகன் பகுதியைச் சேர்ந்தவர் மம்தா. எட்டாம் வகுப்பு படித்து வந்த இவர் தனது வீட்டில் அருகேயுள்ள கால்வாய் கரையோரத்தில் அமர்ந்துகொண்டு ஹெட்போன் மூலம் பாட்டுக்கேட்டுக்கொண்டு இருந்திருக்கிறார்/

அப்போது அங்கு வந்த சிறுத்தை மம்தாவைத் கடுமையாக தாக்கி வனப்பகுதிக்குள் தூக்கிச் சென்றது. இது குறித்து அந்த கிராமத்தினர் னத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் விரைந்து சென்றனர்.

சீனாவோடு மோதல்.. இப்படித்தான் பிரச்சனையை தீர்க்க போகிறோம்.. இந்திய வெளியுறவுத்துறை அதிரடி அறிக்கை!சீனாவோடு மோதல்.. இப்படித்தான் பிரச்சனையை தீர்க்க போகிறோம்.. இந்திய வெளியுறவுத்துறை அதிரடி அறிக்கை!

கொன்றது சிறுத்தை

கொன்றது சிறுத்தை

அப்பகுதியில் சீப்பும், ஹெட்போனும் கிடந்ததை பார்த்துள்ளனர். அந்தச் சிறுமி ஹெட்போனில் பாட்டுக் கேட்டுக்கொண்டு இருந்த போது சிறுத்தை வந்திருப்பதை வனத்துறையினர் யூகித்துள்ளனர்.. அதனால் தான் சிறுத்தை வரும் சத்தம் சிறுமியின் காதுகளுக்கு கேட்கவில்லை என்று கூறிய வனத்துறையினர்.. சிறுமியின் உடலை அருகே இருந்த புதரில் இருந்து மீட்டுள்ளனர். இந்நிலையில் சிறுமியை வேட்டையாடிய சிறுத்தையை பிடிக்க இரண்டு கூண்டுகளையம் 7 கேமராக்களையும் வனத்துறையினர் வைத்துள்ளனர்.

தப்பிய சிறுத்தை

தப்பிய சிறுத்தை

இந்நிலையில் சிறுத்தை திரும்பவும் சிறுமியை கொன்ற கிராமத்திற்கு வந்துள்ளது. வனத்துறையினர் வைத்த வலைக்குள் சிக்கும் நிலை இருந்தது. கூண்டை நோக்கி வந்த போது, எதிர்பாராத விதமாக கிராமத்தினர் சத்தம் எழுப்பியதால் அது கூண்டுக்குள் சிக்காமல் வனத்துக்குள் தப்பி ஓடி விட்டது. இதனால் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினரால் முடியாமல் போனது. தொடர்ந்து சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சி செய்து வருகிறார்கள்.

3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

இதற்கிடையே சிறுமி கொல்லப்பட்டதுடன் சேர்த்து குமாவோனில் கடந்த ஒரு மாதத்தில் சிறுத்தைகளால் எட்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் பிரேத பரிசோதனைக்கு பின்னர் சிறுத்தை தாக்கி இறந்த சிறுமியின் சடலம் ஞாயிற்றுக்கிழமை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு மாநில வனத்துறையிலிருந்து ரூ.3 லட்சம் நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிறுமியின் குடும்பத்திற்கு முதற்கட்டமாக ரூ .90,000த்துக்கான காசோலை வழங்கப்பட்டதாக குமாவோனின் மேற்கு வட்டத்தின் வனப் பாதுகாவலர் பராக் மதுகர் தக்காதே தெரிவித்தார்.

Recommended Video

    முள்ளம்பன்றியுடன் முட்டுக்கொடுக்கும் சிறுத்தை புலி போரில் வெல்வது யார் ? A leopard vs porcupine
    மக்கள் அச்சம்

    மக்கள் அச்சம்

    வெள்ளியன்று, உத்தரகாண்ட் மாநிலம் சம்பாவத் மாவட்டத்தின் தனக்பூர் பகுதியில் 65 வயது முதியவர் விறகு எடுக்கச் சென்றபோது சிறுத்தையால் தாக்கப்பட்டார். பலத்த காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். உத்தரகாண்டில் சிறுத்தை தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களிடையே அச்சத்தை அதிகரித்துள்ளது.

    English summary
    Uttarakhand: A teenage girl who was listening to music on her headphones was attacked and mauled to death by a leopard
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X