For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

200 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன்.. விரைந்தது ராணுவம்! சோகத்தில் கிராமம்

Google Oneindia Tamil News

போபால்: மத்திய பிரதேசத்தில் 3 வயது சிறுவன் 200 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். குழந்தையை மீட்க ராணுவம் விரைந்துள்ளது. மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

எத்தனை முறை தான் கேட்பது ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தைகளின் அழுகுரலை.. இன்னும் எத்தனை உயிர்களைத்தான் கண் முன்னே இழப்பது மூடப்படாத ஆழ்துளை கிணறுகளால்.. நிச்சயம் இதற்கு விடை காண வேண்டும்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தீபாவளி சமயத்தில் புதுக்கோட்டை அருகே விராலிமலை பகுதியில் மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் குழந்தை சுஜித் தவறி விழுந்தான். குழந்தையை உயிருடன் மீட்க நடந்த பல்வேறு முயற்சிகள் தோல்வி அடைந்தன. 4 நாட்களுக்கு பின் உடலைத்தான் மீட்க முடிந்தது.

பெற்றோர் அலட்சியம்

பெற்றோர் அலட்சியம்

இந்த சூழலில் இன்னும் இந்தியாவில் பல்வேறு இடங்களில் மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் தவறிவிழுவது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. மத்திய பிரதேசத்தில்3 வயது குழந்தை தவறி விழுந்துள்ளான். பெற்றோர்களின் அலட்சியம் ஒரு புறம் என்றால் கிணற்றை மூடாமல் அலட்சியமாக இருக்கிறார்கள் என்பது வேதனை கலந்த உண்மை.

3வயது சிறுவன் விழுந்தான்

3வயது சிறுவன் விழுந்தான்

மத்திய பிரதேச மாநிலம் நிவாரி மாவட்டம் பிருத்விப்பூர் பகுதியில் உள்ளது சேதுபுராபரா. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரி கிருஷ்ணன். இவரது 3 வயது மகன் பிரகால்த், விளையாடிக் கொண்டிருந்த போது அருகில் இருந்த மூடப்படாத 200 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான்.

ஓடிவந்த உறவினர்கள்

ஓடிவந்த உறவினர்கள்

குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ஆழ்துளை கிணற்றை பார்த்துள்ளனர். அதில் குழந்தை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக காவல்துறைக்கும் தீயணைப்பு படைக்கும் தகவல் கொடுத்தனர். மீட்பு படையினர் வந்து மீட்பு பணியை தொடங்கி உள்ளனர். சம்பவ இடத்திற்கு ராணுவம் விரைந்துள்ளது.

குழந்தை குரல் கேட்கிறது

மீட்பு குழுவால் குழந்தையின் குரலை கேட்க முடிவதாக நிவாரி மாவட்ட கூடுதல் எஸ்பி தெரிவித்துள்ளார். தண்ணீர் அந்த கிணற்றில் 100 அடிக்கு கீழ் உள்ளதாக கூறப்படுகிறது. குழந்தை எத்தனையாவது அடியில் சிக்கியுள்ளான் என்பது குறித்து தெளிவான தகவல்கள் இல்லை. அந்த கிணற்றிலிருந்து குழந்தையை உயிருடன் மீட்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் இறைவனை வேண்டியபடி தவித்து வருகிறார்கள்.

English summary
Madhya Pradesh: A 3-year-old child fell into an open borewell in Setupurabarah village of Prithvipur area, Niwari earlier today. Operation underway to rescue him, Army reaches the spot.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X