For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முடிவுக்கு வந்தது 5 ஆண்டுகள் பரபரப்பை கிளப்பிய தயாநிதி, கலாநிதி மாறன் மீதான ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு!

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சிவசங்கரனை மிரட்டி அவரது ஏர்செல் நிறுவனப் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு விற்க வைத்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் மாறன் சகோதரர்கள் உட்பட குற்றச்சாட்டுக்கு உள்ளான அனைவரையும் கோர்ட் விடுதலை செய்து இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

A timeline is here for Aircel-Maxis case

இந்த வழக்கு கடந்து வந்த பாதை:

2011 அக்டோபர்: ஸ்பெக்ட்ரம் கேட்டு விண்ணப்பித்த சிவசங்கரன், அதை மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டார் என்று சி.பி.ஐ வழக்கு பதிவு செய்தது. ஏர்செல் நிறுவனத்தின் 74 சதவீத பங்குகளை மேக்சிஸ் குரூப் வாங்கியிருந்த நிலையில் அதற்கு பிரதி உபகாரமாக ரூ.742 கோடியை சன் டைரக்ட் நிறுவனத்தில் முதலீடு செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

2014 ஆகஸ்ட்: சிபிஐ சார்பில் ஆகஸ்ட் 29ம் தேதி தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன், அனந்தகிருஷ்ணன், ரல்ப் மார்ஷல், சன் டைரக்ட் நிறுவனம் ஆகியவற்றிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

2015 பிப்ரவரி 5: ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் 2ஜி சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மாறன் சகோதரர்கள் சுப்ரீம் கோர்ட்டை அணுகினர்.

2015 பிப்ரவரி 9: 2ஜி வழக்கு விசாரிக்கும் நீதிமன்றம் பிறப்பித்த சம்மன் விஷயத்தில் தாங்கள் தலையிட முடியாது என்று சுப்ரீம் கோர்ட் அறிவித்தது.

2015 மார்ச் 16: சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் விசாரணை எல்லை குறித்து மாறன் சகோதரர்கள் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

2015 ஏப்ரல் 1: மாறன் சகோதரர்களின் ரூ.742.58 கோடி மதிப்புள்ள சொத்துக்களை வழக்குடன் இணைத்தது அமலாக்கத்துறை.

2015 ஆகஸ்ட் 3: மலேசியாவிலுள்ள வழக்கில் தொடர்புடைய நபர்கள் தங்களுக்கு ஒத்துழைப்பு தரவில்லை என்று சிபிஐ சுப்ரீம் கோர்ட்டில் புகார் தெரிவித்தது. இதையடுத்து நீதிபதி புது சம்மனை அனுப்பினார்.

2015 ஆகஸ்ட் 21: சன் டிவி குழும சொத்துக்களை வழக்கில் சேர்த்த அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்தது.

2015 செப்டம்பர்: வழக்கின் நிலை தகவலை பதிவு செய்தது சிபிஐ.

2016 ஜனவரி 8: அமலாக்கத்துறை தனது குற்றப்பத்திரிகையில் மாறன் சகோதரர்கள், கலாநிதி மாறனின் மனைவி காவிரி மாறன் மற்றும் மூவரின் பெயர்களையும், இரு நிறுவனங்களையும் இணைத்தது.

2017 ஜனவரி 24: பிப்ரவரி 2ம்தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என நீதிபதி ஓபி ஷைனி அறிவிப்பு..

2017 பிப்ரவரி 2: ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் தொடர்புள்ள அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி தீர்ப்பளித்தார்.

English summary
A timeline is here for Aircel-Maxis case from which Maran brothers gets free.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X