For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராணுவ பாதுகாப்பில் இருக்கும் ஜம்முவில்.. லாரி நிறைய ஆயுதங்களுடன் வந்த 3 தீவிரவாதிகள்!

Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: ஜம்முவின் கத்துவாவில் பயங்கர ஆயுதங்களுடன் லாரி ஒன்றை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து பிடித்தனர். அதில் பதுங்கி இருந்த 3 தீவிரவாதிகளை கைது செய்தனர்.

ஜம்மு காஷ்மீரை மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. அத்துடன் அந்த மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு இரண்டாக பிரித்தது.

A truck carrying arms and ammunition has been recovered in Kathua jammu

இதற்காக கடந்த ஆகஸ்ட் 5 தேதி முதல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வன்முறையை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அத்துடன் இணையதளம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டன. தற்போது ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டாலும் இணையம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் முடக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 5ம் தேதியில் இருந்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை பாதுகாப்பு படையினர் அசம்பாவிதங்களை தவிர்க்க தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன்காரணமாக இதுவரை பெரிய அளவில் எந்த வன்முறை சம்பவங்களும் நிகழவில்லை.

இந்நிலையில் ஜம்முவின் கத்துவாவில் சாலையில் சென்று கொண்டிருந்த லாரி ஒன்றை இன்று மடக்கி பாதுகாப்பு படையினர் சோதித்தனர். அந்த லாரிக்குள் ஏ.கே 47 ரக துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் ஏராளமாக இருந்தது. அத்துடன் லாரிக்குள் 3 தீவிரவாதிகள் பதுங்கி இருந்ததையும் கண்டுபிடித்தனர். அவர்களை சுற்றி வளைத்து பிடித்துகைது செய்தனர். தீவிரவாதிகள் 3 பேரும் ஜெய்ஸ் இ முகமது அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் முதல்முறையாக மிகப்பெரிய அளவில் பயங்கர ஆயுதங்களுடன் லாரி மற்றும் தீவிரவாதிகள் பிடிப்பட்டு இருப்பது அதிர்சியை ஏற்படுத்தி உள்ளது.

English summary
A truck carrying arms and ammunition has been recovered in Kathua, more details are awaited.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X