For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தீபாவளி பட்டாசு போல் ஸ்பார்க் ஏற்படுத்திய மின்வயர்கள்.. மேற்கு வங்க ஆடுகளத்தில் ஆம்பன் ஆடிய ஆட்டம்

Google Oneindia Tamil News

கொல்கத்தா: கொல்கத்தாவில் ஆம்பன் புயலால் மழை பெய்த போது ஒரு பகுதியில் மரக்கிளைகளுடன் மின்வயர்கள் உரசியதால் தீபாவளி பட்டாசு வெடித்தால் ஏற்படும் ஒளியை போல் பிரகாசமாக இருந்தது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

    Cyclone Amphan Live : Landfall begins in Bengal, likely to go on for 4 hrs

    அந்தமான் அருகே தென் வங்கக் கடலில் ஆம்பன் புயல் உருவானது. சூப்பர் புயலாக மாறியது. வங்கக் கடலில் உருவான புயல்களிலேயே மிகவும் வலிமையான புயல் ஆம்பன் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் ஆம்பன் புயல் மேற்கு வங்கம்- வங்கதேசம் இடையே நேற்று பிற்பகல் கரையை கடந்தது. அப்போது மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. இதனால் மரங்கள் வேரோடு சாய்ந்தன.

    ஏசி கிடையாது.. டிரையல் பார்க்க கூடாது.. கஸ்டமர் இன்றி காற்று வாங்கும் தமிழக ஜவுளிக் கடைகள்ஏசி கிடையாது.. டிரையல் பார்க்க கூடாது.. கஸ்டமர் இன்றி காற்று வாங்கும் தமிழக ஜவுளிக் கடைகள்

    புயல் கரை

    புயல் கரை

    குடிசை வீடுகளின் கூரைகள் பறந்தன. இரும்பு கூரைகளும் பறந்தோடின. இந்த நிலையில் ஆம்பன் புயலின் போது மேற்கு வங்கத்தில் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. புயல் கரையை கடப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன்னர் மின்சாரம் தடை செய்யப்பட்டது.

    வெளிச்சம்

    எனினும் ஒரு பகுதியில் மின்சாரம் தடை செய்யப்படாததால் மின் வயரும் மரக்கிளைகளும் உரசியதில் மின்பொறி ஏற்பட்டது. ஆங்காங்கே மின்பொறி ஏற்பட்டதை அடுத்து பார்ப்பதற்கு தீபாவளி சமயத்தில் பட்டாசு வெடித்தால் எப்படி வெளிச்சம் இருக்குமோ அது போன்று இருந்தது.

    மின்சாரத் துண்டிப்பு

    இதை பார்த்த பலர் அச்சமடைந்தனர். பின்னர் மின்வாரியத்திற்கு பொது மக்கள் தகவல் கொடுத்து மின்சாரத்தை துண்டிக்கச் செய்தனர்.

    மூழ்கிய கார்கள்

    மேற்கு வங்கத்தையே புரட்டி போட்ட பேய் மழையால் கொல்கத்தாவில் ஒரு வீடு அருகே நிறுத்தப்பட்ட கார்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதாக கூறுகிறார் இந்த வலைஞர்.

    English summary
    A video goes viral after electric wires touched by tree branches ahead of Amphan in Kolkatta.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X