For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒரு பெண் குழந்தை பிறந்தால் 111 மரம் நடப்படும்.. ராஜஸ்தானில் விசித்திரமான கிராமம்

ராஜஸ்தானில் உள்ள கிராமம் ஒன்றில் பிறக்கும் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் 111 மரங்கள் நடப்படுகிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் உள்ள கிராமம் ஒன்றில் பிறக்கும் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் 111 மரங்கள் நடப்படுகிறது. பிப்லாந்திரி என்ற கிராமத்தில் என்ற இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.

இதற்கு நிறைய காரணங்கள் சொல்லப்படுகிறது. அதேபோல் ஒரு பெண் இறந்தால் 11 மரங்கள் வைத்து பூஜை செய்கிறார்கள்.

தற்போது இந்த கிராமத்தை மக்கள் வந்து ஆச்சர்யமாக பார்த்துவிட்டு செல்கிறார்கள். அம்மாநில அரசு இந்த கிராமத்தை பாராட்டி இருக்கிறது.

எத்தனை வருடம்

எத்தனை வருடம்

கடந்த ஆறு வருடமாக இவர்கள் இப்படி மரம் நடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுவரை 2 லட்சத்து 50 ஆயிரம் மரங்கள் வரை 6 வருடத்தில் இவர்கள் நட்டு இருக்கிறார்கள். அந்த கிராமத்தின் சுற்றுச்சூழலையே இது மாற்றியுள்ளது.

எத்தனை மரம்

எத்தனை மரம்

ஒரு பெண் குழந்தை பிறந்த வுடன் 111 மரங்களை இவர்கள் நட்டு விடுவார்கள். அந்த பெண் குழந்தைக்கு வைக்கப்படும் பெயர்தான் அந்த மரத்திற்கும் வைக்கப்படும். பின் அந்த மரத்தை கடைசி காலம் வரை அந்த பெண்ணின் குடும்பம் பாதுகாக்கும். ஒரு பெண் இறந்தால் 11 மரங்கள் வைத்து பூஜை செய்கிறார்கள்.

21, 000 மரம்

21, 000 மரம்

அதேபோல் ஒரு வீட்டில் பெண் பிறந்தவுடன் அந்த ஊரில் இருக்கும் எல்லோரிடமும் பணம் வாங்கப்படும். மொத்தம் 21 ஆயிரம் ரூபாய் வாங்கப்படும். பின் அந்த பெண்ணின் அப்பாவிடம் இருந்து 10 ஆயிரம் வாங்கப்படும். இது அப்படியே பெண்ணின் பெயரில் பிக்சட் டெபாசிட் செய்யப்படும். 21 வயது வரும் வரை இதில் பணம் போடப்படும்.

காரணம்

காரணம்

பெண் குழந்தைகளையும், இயற்கையையும் மதிக்க வேண்டும் என்பதற்காக இந்த திட்டம் நடைபெறுகிறது. இந்த ஆறு வருடத்தில் அந்த கிராமம் மொத்தமாக மாறியுள்ளது. அதேபோல் பெண்களும் அங்கு மிகவும் சுதந்திரத்துடன் இருக்கிறார்கள் என்று கூறப்பட்டு இருக்கிறது.

English summary
A village named Piplantri in Rajasthan plants 111 trees for every girl child born.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X