For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எங்கள் நிலை மோசமாக இருக்கிறது.. காப்பாற்றுங்கள்.. ராகுலிடம் கதறி அழுத பெண்.. ஷாக்கிங் வீடியோ!

ஜம்மு காஷ்மீர் சென்ற எதிர்கட்சித் தலைவர்களிடம் பெண் ஒருவர் கதறி அழுது புகார் கூறிய வீடியோ ஒன்று இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.

Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சென்ற எதிர்கட்சித் தலைவர்களிடம் பெண் ஒருவர் கதறி அழுது புகார் கூறிய வீடியோ ஒன்று இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அதிகாரத்தை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்தது. அதேபோல் காஷ்மீரில் முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி, பருக் அப்துல்லா, உமர் அப்துல்லா ஆகியோர் வீட்டு காவலில் வைக்கப்பட்டு உள்ளனர்.

இது நாடு முழுக்க பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்க மனித உரிமை மீறல்கள் மிக மோசமாக செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

பார்வை

பார்வை

இந்த நிலையில் காஷ்மீர் நிலைமையை பார்வையிட நேற்று எதிர்கட்சித் தலைவர்கள் ஸ்ரீநகர் சென்றனர். காங்கிரஸ் தலைவர்கள் குலாம் நபி ஆசாத், ராகுல் காந்தி, கே சி வேணுகோபால், இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் டி ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் சீதாராம் யெட்சூரி, திரிணாமுல் தலைவர் தினேஷ் திரிவேதி, திமுக சார்பாக திருச்சி சிவா உள்ளிட்ட 14க்கும் மேற்பட்ட தலைவர்கள் காஷ்மீர் சென்றனர்.

அனுமதி இல்லை

அனுமதி இல்லை

ஆனால் இவர்கள் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டனர். ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் எல்லோரையும் ராணுவம் நேற்று பாதியில் திருப்பி அனுப்பியது. அவர்களுடன் சென்ற செய்தியாளர்களையும் ராணுவ வீரர்கள் மொத்தமாக திருப்பி அனுப்பினார்கள்.

பெண்

பெண்

இந்த நிலையில் இந்த தலைவர்கள் வேறு விமானம் மூலம் மீண்டும் டெல்லி திரும்பி வந்தனர். அப்போது அதே விமானத்தில் வந்த காஷ்மீர் பெண் ஒருவர் ராகுல் காந்தியிடம் கண்ணீர் விட்டு தனது குறைகளை குறிப்பிட்டார். காஷ்மீரில் மக்கள் படும் கஷ்டங்களை அந்த பெண் கதறி அழுதபடி ராகுல் காந்தி உட்பட எதிர்கட்சித் தலைவர்களிடம் சொன்னார்.

என்ன சொன்னார்

என்ன சொன்னார்

அந்த பெண், நாங்கள் மிக மோசமான நிலையில் இருக்கிறோம். அரசு எங்கள் மீது கடுமையாக கட்டுப்பாடுகளை விதிக்கிறது. எங்களை காப்பாற்றுங்கள். என்னுடைய குழந்தைகள் இரண்டு வாரமாக வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை. என்னுடைய தம்பி ஒரு இருதய நோயாளி. அவருக்கு மருந்து வாங்க கூட முடியவில்லை.

மோசம்

எங்களை அரசு மோசமாக நடத்துகிறது. என்ன செய்வது என்றே தெரியவில்லை, என்று அவர் கதறி அழுதபடி பேசினார். இதையடுத்து ராகுல் காந்தி அந்த பெண்ணை சமாதானம் செய்தார். நீங்கள் கவலைப்பட வேண்டாம், அமைதியாக இருங்கள் என்று அந்த பெண்ணை ராகுல் காந்தி சமாதானம் செய்தார்.

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

எதிர்கட்சித் தலைவர்களிடம் அழுதபடி அந்த பெண் முறையிடும் இந்த வீடியோ இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. காஷ்மீரின் உண்மையான நிலை இதுதான். அங்கு மக்கள் இப்படித்தான் கஷ்டப்பட்டு வருகிறார்கள். இதைத்தான் அரசு தீவிரமாக மறைத்து வருகிறது என்று மக்கள் சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்டுள்ளனர்.

English summary
A woman complained about the situation in Kashmir to the delegation of Opposition leaders in onboard flight.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X