For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விமான நிலையத்திற்கு லேட்டாக வந்த மத்திய அமைச்சரிடம் சண்டையிட்ட பெண் டாக்டர்

விமான நிலையத்திற்கு தாமதமாக வந்த மத்திய அமைச்சரிடம் பெண் டாக்டர் ஒருவர் சண்டையிட்டு இருக்கிறார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    விமான நிலையத்திற்கு லேட்டாக வந்த மத்திய அமைச்சரிடம் சண்டையிட்ட பெண் டாக்டர்- வீடியோ

    இம்பால்: விமான நிலையத்திற்கு தாமதமாக வந்த மத்திய அமைச்சர் அல்போன்ஸ் கன்னதானமிடம் பெண் டாக்டர் ஒருவர் சண்டையிட்டு இருக்கிறார். அந்த அமைச்சரால் விமானம் தாமதமாக புறப்பட்ட காரணத்தால் இந்த சண்டை நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

    மின்னணு, தகவல் தொழில்நுட்பம், கலாச்சாரம் மற்றும் சுற்றுலா துறையை கவனித்து வரும் மத்திய அமைச்சர் அல்போன்ஸ் கன்னதானம் நேற்று இம்பாலில் இருந்து பாட்னாவிற்கு விமானம் மூலம் செல்ல இருந்தார். அதே விமானத்தில் நீராலா என்ற பெண் டாக்டர் ஒருவரும் பயணிக்க இருந்தார்.

    A woman fights with BJP minister about VIP culture

    இந்த நிலையில் அமைச்சரின் வருகைக்காக விமானம் மிகவும் தாமதமாக புறப்பட்டு இருக்கிறது. ஆனால் அந்த பெண் டாக்டர் மிகவும் முக்கியமான ஒரு சிகிச்சைக்காக அவசரமாக செல்ல வேண்டி இருந்திருக்கிறது.

    இதையடுத்து விமான நிலையத்திற்கு தாமதமாக வந்த அமைச்சரிடம் அந்த டாக்டர் சண்டையிட்டு இருக்கிறார்.
    மத்திய அமைச்சருடன் அவர் நேரடி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    மத்திய அமைச்சர் அந்த பெண்ணை சமாதானப்படுத்த முயன்றார். ஆனால் அதை அந்த பெண் ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும் விமானம் இனிமேல் தாமதப்படுத்தப்படமாட்டாது என எழுதி தரும் படி அவர் மத்திய அமைச்சரிடம் கேட்டார்.

    தற்போது இதை பற்றிய வீடியோ இணைய தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் அந்த பெண் டாக்டர் பாட்டனாவில் பிடிக்க வேண்டிய விமானத்தை இதன் காரணமாக தவறவிட்டு விட்டார் என்று கூறப்படுகிறது.

    English summary
    A woman doctor named Nirala, who had to attend to a critical patient at her destination, fought with Union Minister Alphons Kannanthanam after her flight got delayed due to the VVIP's arrival.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X