For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

36 மணி நேரம் உயிருக்கு போராடினேன்.. பெங்களூரில் 6 பேரால் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் வாக்குமூலம்

பெங்களூரில் ஹோட்டல் ஒன்றில் வேலை செய்யும் பெண் ஒருவரை ஆறு ஆண்கள் சேர்ந்து வன்புணர்வு செய்து உள்ளனர்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    பெங்களூரில் 6 பேரால் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் வாக்குமூலம்- வீடியோ

    பெங்களூர்: பெங்களூரில் ஹோட்டல் ஒன்றில் வேலை செய்யும் பெண் ஒருவரை ஆறு ஆண்கள் சேர்ந்து வன்புணர்வு செய்து உள்ளனர். இந்த சம்பவம் நடந்த பின் அந்த பெண் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்துள்ளார்.

    பெங்களூரின் அனேகல் என்ற பகுதியில் இந்த மோசமான சம்பவம் நடந்துள்ளது. அங்கு இருக்கும் பேருந்து நிலையத்தில் பல மணி நேரமாக அந்த பெண் ஆடையில்லாமல் படுத்து இருந்துள்ளார்.

    மேலும் இவர் உடலில் நிறைய காயங்களும், எலும்பு முறிவுகளும் ஏற்பட்டு இருக்கிறது. தற்போது இந்த பெண் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    வன்புணர்வு

    வன்புணர்வு

    அந்த பெண்ணின் குடும்பத்தில் உள்ளவர்கள் சில வருடம் முன்பு நடந்த நிலநடுக்கம் ஒன்றில் மொத்தம் இறந்து போய் இருக்கிறார்கள். வீட்டின் கட்டிடம் இடிந்து விழுந்ததால் இந்த மரணம் நடந்து உள்ளது. இந்த பெண் தனியாக ஹோட்டல் ஒன்றில் 50 ரூபாய் சம்பளத்திற்கு பாத்திரம் கழுவும் வேலையில் ஈடுபட்டு இருக்கிறார். தினமும் இந்த பெண்ணை கவனித்த சிலர் ஒரு வாரத்திற்கு முன்பு அந்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.

    நடந்தது என்ன

    நடந்தது என்ன

    இந்த பெண் வீட்டிற்கு திரும்பும் சமயத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 6 அடையாளம் தெரியாத நபர்கள் வந்து அந்த பெண்ணை அடித்து அருகில் இருந்து காட்டுப்பகுதிக்குள் கூட்டி சென்றுள்ளனர். அங்கு ஆறு பேரும் இந்த பெண்ணை கொடூரமாக வன்புணர்வு செய்துள்ளனர். மேலும் அந்த பெண்ணின் கால்களை கல்லால் அடித்து உடைத்து உள்ளனர். கையையும் திருகி உடைத்துள்ளனர். இரவு முழுக்க இந்த கொடுமை நடந்துள்ளது.

    உயிருக்கு போராட்டம்

    உயிருக்கு போராட்டம்

    உயிருக்கு போராடிக் கொண்டு அந்த பெண் அதே இடத்தில் இரவு முழுக்க கிடந்து இருக்கிறார். அதன்பின் கொஞ்சமாக தரையில் ஊர்ந்து வந்து பக்கத்தில் இருந்த பேருந்து நிறுத்தத்தில் படுத்துள்ளார். பின் குப்பையில் கிடந்த துணியை உடலில் சுற்றி அங்கேயே 36 மணிநேரமாக சாப்பாடு இன்றி கஷ்டப்பட்டு இருக்கிறார். அந்த பெண்ணுக்கு யாரும் உதவி செய்யக்கூட முன்வரவில்லை என்று கூறப்படுகிறது.

    மருத்துவமனையில் அனுமதி

    மருத்துவமனையில் அனுமதி

    அந்த பெண்ணை பார்த்த பாரிஜாதா ஜி.டி என்று சமூக ஆர்வலர் அவரை மீட்டு உள்ளார். பின் அங்கு இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இவர் போலீசில் தனக்கு நடந்த அனைத்து நிகழ்வுகளையும் வாக்குமூலமாக அளித்துள்ளார். நிர்பயா உதவித் தொகை திட்டத்தில் இருந்து இந்த பெண்ணுக்கு உதவி பெற்றுத்தரப்படும் என்று கூறப்படுகிறது.

    English summary
    A Woman struggled in bus stand for 36 hours after raped by 6 men in Bengaluru. She has rescued by social activist Parijatha G T and admitted in hospital. Currently police investigating in this case.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X