For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஹரியானாவில் வாக்கு சேகரிக்க சென்ற சித்து மீது செருப்பு வீச்சு.. மோடியை விமர்சித்ததால் பெண் ஆத்திரம்!

Google Oneindia Tamil News

சண்டிகர்: ஹரியானாவில் வாக்கு சேகரித்த முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்து மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் கிரிக்கெட் வீரரான நவ்ஜோத் சிங் சித்து தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ளார். முதலில் பா.ஜ.கவில் சேர்ந்து பின் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இப்போது பஞ்சாப் மாநில காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராக பதவி வகித்து வருகிறார் அமைச்சராக உள்ளார்.

அவ்வப்போது சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார் சித்து. மேலும் கிடைக்கும் இடத்தில் எல்லாம் பிரதமர் மோடியை கடுமையாக சித்து விமர்சித்து வருகிறார். இதனால் இவருக்கும் பாஜக தலைவர்களுக்கும் இடையே அவ்வப்பது வார்த்தைப் போர் ஏற்படுவது வழக்கம்.

மோடிக்கு எதிராக வேட்புமனு அளித்த முன்னாள் ராணுவ வீரரின் வழக்கு.. உச்ச நீதிமன்றம் அதிரடி தள்ளுபடி! மோடிக்கு எதிராக வேட்புமனு அளித்த முன்னாள் ராணுவ வீரரின் வழக்கு.. உச்ச நீதிமன்றம் அதிரடி தள்ளுபடி!

மோடி மோடி என முழக்கம்

மோடி மோடி என முழக்கம்

அப்போது பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து பேசினார் சித்து. இதனால் கூட்டத்தில் இருந்த சிலர் சித்துவை வெறுப்பேற்றும் வகையில் "மோடி மோடி" என முழக்கமிட்டனர்.

செருப்பு வீச்சு

செருப்பு வீச்சு

இதைத்தொடர்ந்து பெண் ஒருவர் சித்துவை நோக்கி செருப்பை வீசினார். இருப்பினும் சித்து மீது செருப்பு படவில்லை. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

விமர்சித்ததால் ஆத்திரம்

விமர்சித்ததால் ஆத்திரம்

இதைத்தொடர்ந்து செருப்பு வீசிய பெண்ணை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பிரதமர் மோடியை விமர்சித்து பேசியதால் சித்து மீது செருப்பு வீசியதாக அந்த பெண் கூறினார்.

தக்காளி வீச்சு

தக்காளி வீச்சு

சித்து மீது தாக்குதல் நடத்தப்படுவது இது ஒன்றும் முதல் முறையல்ல. முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை அமேதியில் வாக்கு சேகரிக்க சென்ற சித்துவின் பாதுகாப்பு வாகனத்தின் மீது தக்காளி கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
A woman thrown a chappal on Punjab Minister Sidhu in Haryana election campaign.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X