For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அனைத்து நலத்திட்டங்களுக்கும் ஆதார் எண் இணைக்க காலக்கெடு மார்ச் 31 வரை நீட்டிப்பு

மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை அடுத்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதிவரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: அரசின் நலத்திட்டங்களுக்கு ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆதார் எண் இணைப்பு தொடர்பான உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

பல்வேறு சமூக நலத்திட்டங்களின் பலன்களை அடைவதற்கு ஆதார் அடையாள எண்ணை இணைப்பது கட்டாயம் என்ற நிலைப்பாட்டை மத்திய அரசு எடுத்துள்ளது. லிண்டர் மானியம், மண்ணெண்ணெய் மானியம், உரமானியம், மதிய உணவு சாப்பிடும் மாணவர்கள், காசநோயாளிகள், உள்பட பல சமூக நலத்திட்டங்களின் பயனை பெற ஆதார் எண் இணைப்பது அவசியம் என்பது மத்திய அரசின் உத்தரவு.

மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களுக்கு வருமான வரித்துறையால் நிரந்தர கணக்கு எண் அளிக்கப்படுகிறது.

ஆதார் எண் இணைப்பு

ஆதார் எண் இணைப்பு

அந்த பான் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. இதற்கான காலக்கெடு, செப்டம்பர் 30ம்தேதி என்று நிர்ணயிக்கப்பட்டது. பிறகு இந்த கால அவகாசம் ஆகஸ்டு 31ஆம்தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

வழக்கு தாக்கல்

வழக்கு தாக்கல்

ஆனால் ஆதார், அரசியல் சாசனப்படி செல்லுபடியாகத்தக்கதா என்ற கேள்வியை எழுப்பி பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டு, அவை உச்சநீதிமன்றம் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், மத்திய அரசின் நிலைப்பாட்டில் இருந்து நிவாரணம் கேட்டும் பல்வேறு தரப்பினரும் வழக்குகள் தாக்கல் செய்துள்ளனர்.

சமூக நலத்திட்டங்களுக்கு கட்டாயம்

சமூக நலத்திட்டங்களுக்கு கட்டாயம்

பள்ளிகளில் மதிய உணவு திட்டங்களுக்கு ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்பது பற்றிய மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்ய பொது நல மனுவில் இன்று உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதிக்க மறுத்து விட்டது. அதாவது சமூக நலத் திட்டங்களில் கட்டாயமாக்கும் மத்திய அரசின் முடிவுக்கு தடை விதிக்க முடியாது என கூறிவிட்டது உச்ச்சநீதிமன்றம்.

ஆதார் எண் இணைக்க அவகாசம்

ஆதார் எண் இணைக்க அவகாசம்

ஆதார் பற்றிய மத்திய அரசின் முடிவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு விசாரணையை, உச்சநீதிமன்றத்தில் நவம்பர் மாதத்துக்கு தள்ளி வைத்துள்ளது. இதனையடுத்து மத்திய அரசின் பல்வேறு சமூக நலத்திட்டங்களை பெற ஆதார் எண்ணை அளிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 31ஆம்தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

மார்ச் 31, 2018 கடைசி நாள்

மார்ச் 31, 2018 கடைசி நாள்

இந்த நிலையில் அரசின் நலத்திட்டங்களுக்கு ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆதார் எண் இணைப்பு தொடர்பான உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

காலக்கெடு இருக்கு மக்களே

காலக்கெடு இருக்கு மக்களே

இனிமே யாராவது உங்க ஆதார் எண்ணை சிம் கார்டுடன் இணைக்காவிட்டால் கனெக்சனை கட் பண்ணிடுவோம் என்று மெசேஜ் அனுப்பினால் மார்ச் 31வரை காலகெடு இருக்கிறது என்று கூப்பிட்டு சொல்லுங்க.

English summary
The deadline for mandatory Aadhaar to avail social welfare benefits to March 31,2018 from the earlier December 31.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X