For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதார் எண் கட்டாயம்!

வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய ஆதார் எண்ணை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

By Karthikeyan
Google Oneindia Tamil News

டெல்லி: வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதார் எண்ணை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நிர்ந்தர கணக்கு எண் (பான்) பெறவும் ஆதாரை அவசியமாக்க அரசு முடிவு செய்துள்ளது.

மத்திய அரசின் திட்டங்களுக்கு ஆதார் எண் சமர்பிக்க வேண்டியது கட்டாயாமாக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே எல்பிஜி இணைப்பு, பொது விநியோகதிட்டம், தேசிய சமூக உதவி திட்டங்கள், தீன் தயாள் அந்த்யோதயா யோஜனா வின் கீழ் திறன் வளர்ப்பு பயிற்சிகள் உள்ளிட்டவற்றுக்கு ஆதார் அவசியம் என்பது என நடைமுறையில் உள்ளது.

Aadhaar number mandatory for Filing of Income Tax Account

இந்நிலையில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதார் எண்ணை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அடுத்த நிதியாண்டுக்கான வருமான வரித் தாக்கலில் இது அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆதார் எண்ணையும் பதிவு செய்வதன் மூலம், வரி செலுத்துபவரின் ‌வங்கிக் கணக்கு விவரங்கள், நிதி நடவடிக்கைகளை எளிதாக‌ பின்தொடர வாய்ப்பு ஏற்படும் என மத்திய அரசு கருதுகிறது‌.

இதற்கான வருமான வரிப் படிவத்தில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டு அடுத்த நிதியாண்டு முதல் அமலுக்கு வரும் என மத்திய அரசு வட்டார தகவல் தெரிவிக்கின்றன. மேலும் நிர்ந்தர கணக்கு எண் (பான்) பெறவும் ஆதாரை அவசியமாக்க அரசு முடிவு செய்துள்ளது. வருமான வரிப் படிவத்தில் கணக்கு தாக்கல் செய்பவரின் வங்கிக் கணக்கு விவரங்களை தெரிவிக்க வேண்டியது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
central government have planned Aadhaar number mandatory for Filing of Income Tax Account.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X