For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வருமான வரி கணக்கு தாக்கலுக்கு ஆதார் எண் கட்டாயம்!

Google Oneindia Tamil News

Recommended Video

    அரசு சேவைகளுக்கு ஆதார் கட்டாயம்...சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு- வீடியோ

    டெல்லி : வருமான வரி தாக்கல் செய்வதற்கு ஆதார் எண் கட்டாயம் என்றும் பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பது அவசியம் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    ஆதார் அட்டை இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது என்று அறிவிக்கக் கோரி 31 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, ஏ.எம்.கான்வில்கார், டி ஒய் சந்திரசூட் மற்றும் அசோக் பூஷன் ஆகியோர் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது.

    Aadhar is must for ITR and Pan

    [வங்கி சேவைகளுக்கு ஆதார் எண் அவசியம் இல்லை- சுப்ரீம் கோர்ட் அதிரடி]

    இந்நிலையில் இதன் அரசியல் சாசன அமர்வு சுமார் 38 நாட்கள் விசாரணை நடத்தி கடந்த மே 10-ஆம் தேதி தீர்ப்பு தேதியை ஒத்திவைத்தது. அதன்படி இன்று தீர்ப்பு வழங்கியது. இதில் 5 பேரில் 4 நீதிபதிகள் ஆதார் கட்டாயம் என்று தீர்ப்பளித்தனர்.

    வங்கி சேவைகளுக்கு ஆதார் கட்டாயமில்லை என்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் வருமான வரி கணக்கு தாக்கலுக்கு ஆதார் எண் இணைப்பது அவசியம் என்றும் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்துள்ளனர்.

    Aadhar is must for ITR and Pan

    English summary
    The Supreme Court on Wednesday allowed linking of Aadhaar with PAN or Permanent Account Number, which is mandatory for filing of income tax return (ITR).
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X