ஆம் ஆத்மி செய்தித்தொடர்பாளர் அல்கா லம்பா திடீர் சஸ்பென்ட்
டெல்லி: ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ அல்கா லம்பா அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பொறுப்பில் இருந்து 2 மாத காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
டெல்லியில் பிரீமியம் பேருந்து சேவை விவகாரத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு டெல்லி போக்குவரத்துறை அமைச்சர் கோபால் ராய் உடல்நலக் குறைவு காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்தார்.

மேலும், பிரீமியம் பேருந்து சேவை திட்டத்தில் எந்தவித ஊழலும் நடைபெறவவில்லை. சிலர் வேண்டுமென்றே வதந்திகளை பரப்புகின்றனர். அவ்வாறு ஊழல் நிரூபணம் ஆனால் நான் சிறைக்கு செல்ல தயாராக இருக்கிறேன் எனவும் ராய் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடர்பாளரான அல்கா லம்பா, டெல்லி முதல்வர் அறிவுறுத்தலின் பேரிலே ராய் பதவி விலகியதாக தெரிவித்திருந்தார். இதன் காரணமாக அல்கா லம்பா, ஆம் ஆத்மியின் செய்தித் தொடர்பாளர் பொறுப்பில் இருந்து 2 மாத காலத்துக்கு இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து ஆம் ஆத்மி எம்ஏல்ஏ அல்கா லம்பா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: நான் ஒழுக்கம் நிறைந்தவர் என்பதால் கட்சியின் முடிவை மதிக்கிறேன். நான் ஏதேனும் தெரியாமல் தவறு செய்திருந்தால், வருத்தம் தெரிவிக்க தயார் என்று கூறியுள்ளார்.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications