For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கெஜ்ரிவால், விஸ்வாசின் லோக்சபா தேர்தல் செலவு ரூ 1 கோடியாம்... தொப்பிக்கு மட்டும் ரூ 5.36 லட்சம்!

Google Oneindia Tamil News

டெல்லி: சாதாரண மக்களின் கட்சி என்று சொல்லப்பட்டாலும் கூட, நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கெஜ்ரிவால் மற்றும் குமார் விஸ்வாஸ் ஆகியோர் தேர்தலுக்காக ரூ. 1 கோடி செலவிட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

கட்சி ஆரம்பிக்கப்பட்ட குறைந்த காலத்திலேயே டெல்லியில் ஆட்சியை பிடிக்கும் அளவிற்கு மக்களிடம் செல்வாக்குப் பெற்றது ஆம் ஆத்மி கட்சி. ஆனால், ஆட்சி அமைத்த ஒன்றரை மாத காலத்திலேயே, தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து மக்களுக்கு அதிர்ச்சி அளித்தார் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால்.

ஏதாவது செய்வார் என்று மக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் இப்படி பானையைப் போட்டு படீரென்று உடைத்த கெஜ்ரிவாலின் செயல் மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

ஆனால் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அக்கட்சியினர் லோக்சபா தேர்தலில் கவனம் செலுத்தினர். பாஜக பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப் பட்டிருந்த மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் போட்டியிட்டார் கெஜ்ரிவால். அதேபோல், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்திக்கு எதிராக அமேதி தொகுதியில் களமிறங்கினார் அக்கட்சியின் குமார் விஸ்வாஸ்.

லோக்சபா தேர்தலில் இவர்கள் இருவருக்கும் தோல்வியே கிடைத்தது. ஆனபோதும், இவர்களது தேர்தல் செலவு ரூ ஒரு கோடியாம்.

மோடியை விட அதிகம்...

மோடியை விட அதிகம்...

வாரணாசி தொகுதியில் கெஜ்ரிவாலின் தேர்தல் செலவு ரூ 50.10 லட்சமாம். இதே தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட மோடியின் தேர்தல் செலவு ரூ 37.62 லட்சம் ஆகும்.

ராகுலை பின்னுக்குத் தள்ளி...

ராகுலை பின்னுக்குத் தள்ளி...

அதேபோல், அமேதி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தியின் தேர்தல் செலவு ரூ 38.12 லட்சம் தான். ஆனால், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளர் விஸ்வாசின் தேர்தல் செலவு ரூ 58.16 லட்சம்.

பாஜக வேட்பாளர்...

பாஜக வேட்பாளர்...

இவ்வளவுக்கும் அமேதி தொகுதியில் ராகுலுக்கும், பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானிக்கும் தான் முக்கிய போட்டி நிலவியது. ஆனால், ஸ்மிருதி இரானியின் தேர்தல் செலவு ரூ 35.32 லட்சம் மட்டுமே.

ராகுலுக்கு ஆதரவாக...

ராகுலுக்கு ஆதரவாக...

அமேதி தொகுதியில் ராகுலுக்கு ஆதரவாக அவரது தாயாரும், காங்கிரஸ் கட்சித் தலைவருமான சோனியாவும், ராகுலின் சகோதரியுமான பிரியங்காவும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். ஆனபோதும், கட்சிச் சார்பில் தேர்தல் செலவுக்காக ஒதுக்கப்பட்ட பணம் கடந்த 2009ம் ஆண்டு ரூ 25 லட்சம் ஆக இருந்தது, இம்முறை ரூ 50 லட்சமாக உயர்த்தப்பட்டது.

கைக்காசு செலவிடவில்லை...

கைக்காசு செலவிடவில்லை...

கட்சிச் சார்பில் ஒதுக்கப்பட்ட ரூ 50 லட்சத்தில் ரூ 38.12 லட்சத்தை மட்டுமே தேர்தல் செலவுகளுக்கு பயன்படுத்தினார் ராகுல். இந்த தேர்தல் செலவுகளில் ஒரு ரூபாய் கூட அவரது சொந்தப் பணமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்மிருதியின் செலவு...

ஸ்மிருதியின் செலவு...

ராகுலோடு ஒப்பிடுகையில் பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானியின் தேர்தல் செலவு ரூ 35.32 லட்சம் ஆகும். ஆனால், கட்சி அளித்த நிதி ரூ 46 லட்சம் ஆகும். மேலும், தேர்தலுக்காக ஆயிரம் ரூபாய் தனது கைக் காசையும் செலவழித்துள்ளார் ஸ்மிருதி.

கட்சிப்பணம்...

கட்சிப்பணம்...

இவர்களோடு ஒப்பிடுகையில் ஆம் ஆத்மி வேட்பாளர் விஸ்வாசுக்கு தேர்தல் செலவுக்கென கட்சிச் சார்பில் ரூ 60 லட்சம் ஒதுக்கப்பட்டது. அதில், ரூ 58.16 லட்சத்தை தேர்தலுக்காக அவர் செலவழித்தார். இதில், ஒரு லட்சத்து எழுபத்தைந்தாயிரம் பணம் அவருடைய சொந்தக் காசு.

நான்காவது இடம்...

நான்காவது இடம்...

கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட விஸ்வாஸ் தேர்தலில் நான்காவது இடத்தைத்தான் பெற முடிந்தது. முதல் மூன்று இடங்களை ராகுல்,ஸ்மிருதி மற்றும் பி.எஸ்.பி வேட்பாளர் தர்மேந்திர பிரதாப் சிங் பிடித்தனர்.

ஒரு பிரச்சாரக் கூட்டமில்லை...

ஒரு பிரச்சாரக் கூட்டமில்லை...

தேர்தலுக்காக ரூ 13.99 லட்சம் மட்டுமே செலவழித்த தர்மேந்திரா ஒரு பிரச்சாரக் கூட்டமோ, பேரணியோ அல்லது ஊர்வலமோ மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செலவுகள்...

முக்கிய செலவுகள்...

ராகுல் தனது தேர்தல் செலவில் சரி பாதி பிரச்சாரக் கூட்டங்களுக்கு செலவழித்துள்ளார். ஸ்மிருதி இரானி சுமார் ரூ 14.60 லட்சத்தை வாகனங்களுக்கு செலவு செய்துள்ளார். விஸ்வாஸ் தனது தேர்தல் செலவில் ரூ 16 லட்சத்தை போஸ்டர்கள், பிரச்சார நோட்டீஸ்கள் அடிக்க செலவு செய்துள்ளார்.

தொப்பி...

தொப்பி...

மேலும், ஆம் ஆத்மியின் முக்கிய அடையாளமான வெள்ளைத் தொப்பி வாங்குவதற்காக மட்டும் ரூ 5.36 லட்சம் செலவழித்துள்ளார் விஸ்வாஸ்.

English summary
They had set out with a message that they are the aam aadmi (common man), but a look at their expense chart in the recently concluded Lok Sabha election points otherwise. Aam Aadmi Party leaders Arvind Kejriwal and Kumar Vishwas splurged more than Rs one crore between them during the polls.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X