For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆமிர்கானின் மதச் சகிப்பின்மைப் பேச்சு... சக கலைஞர்களின் ஆதரவும் எதிர்ப்பும்!

By Shankar
Google Oneindia Tamil News

சர்ச்சையின் மையப்புள்ளியாகிவிட்டார் ஆமிர்கான். இந்தியாவில் மதச் சகிப்பின்மை குறைந்துவிட்டது குறித்து அவர் நேற்று பேசிய பேச்சுக்கு ஆதரவும் எதிர்ப்பும் சரிவிகிதத்தில் உள்ளன.

"என் மனைவி கிரணும், நானும் இத்தனை காலம் இந்தியாவில் வாழ்ந்து விட்டோம். முதல் முறையாக, இந்தியாவை விட்டு நாம் வெளியேறி விடலாமா என என் மனைவி கேட்டார். அவர், தன் குழந்தைகளுக்காக பயப்படுகிறார். எங்களைச் சுற்றியுள்ள சூழலைக்கண்டு அவர் பயப்படுகிறார். ஒவ்வொரு நாளும் செய்தித்தாளை பிரித்துப் பார்க்கவே அவர் அஞ்சுகிறார். நாட்டில் பாதுகாப்பற்ற உணர்வு பெருகி வருவதையே இது காட்டுகிறது," என்ற அவரது பேச்சு பலரைக் கொந்தளிக்க வைத்துள்ளது.

இந்தியாவில் இருப்பதால்தான் உங்களால் இப்படியெல்லாம் பேச முடிகிறது. இதுவே பங்களாதேஷ், பாகிஸ்தானில் நீங்கள் இருந்திருந்தால் தெரிந்திருக்கும் சேதி, என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் பலர்.

ஆமிர்கான் கூறியதில் என்ன தவறு... தத்ரி கொடுமையைப் (மாட்டுக்கறி உண்டதாக வந்த வதந்தியை நம்பி மதவெறிக் கும்பல் ஒரு முஸ்லீமை கொடூரமாக அடித்தே கொன்றது) பார்த்த பிறகும் சும்மா இருப்பவன் மனிதனா? ஒரு கலைஞனாக தனது எதிர்ப்பை அருமையாக அவர் பதிவு செய்துள்ளார், என்று அவரை ஆதரிப்போர் கூறுகின்றனர்.

சில விஐபிக்களின் கருத்துகள் இதோ...

ரவீணா டான்டன் (நடிகை)

ரவீணா டான்டன் (நடிகை)

மும்பையின் மத்தியில் குண்டு வெடிக்கும் போது இவர்கள் எங்கே போனார்கள். நாடு என்ன செய்தது எனக் கேட்பவர்கள், நாம் என்ன நாட்டுக்கு செய்தோம் என்பதையும் யோசிக்க வேண்டும் எனக் கேட்டுள்ளார்.

கபீர்கான் (பஜ்ராங்கி பாய்ஜான், ஏக் தா டைகர் இயக்குநர்)

கபீர்கான் (பஜ்ராங்கி பாய்ஜான், ஏக் தா டைகர் இயக்குநர்)

அமீர்கான் சொன்னதை பலரும் புரிந்து கொள்ளாமல் பிரச்னையாக பேசி வருகிறார்கள். அவர் தேசம் மதச் சகிப்பின்மையின்றி உள்ளதெனக் கூறவில்லை. தேசத்தின் சூழல் அப்படி இருப்பதாகவே கூறியுள்ளார்.

சஞ்சய் குப்தா (ஜாஸ்பா பட இயக்குநர்)

சஞ்சய் குப்தா (ஜாஸ்பா பட இயக்குநர்)

ஆமிர்கான் ஒன்றும் நாட்டை விட்டு வெளியேறுவேன் என சொல்லவில்லை. முழுமையாகப் பேட்டியை பார்க்கவும். அவர் பயப்படுவதாகவே சொல்லியிருக்கிறார். மேலும் இதிலிருந்து ஒரு விஷயம் மட்டுமே நன்றாகப் புரிகிறது. மனதில் உள்ள விஷயங்களை பொது இடத்தில் பேசக்கூடாது.

ஏ.ஆர்.ரஹ்மான் (இசையமைப்பாளர்)

ஏ.ஆர்.ரஹ்மான் (இசையமைப்பாளர்)

கடந்த சில மாதங்களுக்கு முன் ஈரானிய திரைப்படமான 'முகம்மது மெஸேஞ்சர் ஆப் காட்' என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததற்காக எனக்கு எதிராக பத்வா விதிக்கப்பட்டது. அந்த நேரத்தில், நான் பங்கேற்க இருந்த இசை நிகழ்ச்சியை டெல்லி, உத்தரபிரதேச மாநில முதல்வர்கள் கடைசி நேரத்தில் ரத்து செய்தனர். எதுவும் வன்முறையாக இருக்க கூடாது. நாகரிக மக்களாகிய நாம், சிறந்த குடிமக்கள் என்பதை உலகுக்கு நாம் காண்பிக்க வேண்டும்.

ஷாரூக்கான் (நடிகர்)

ஷாரூக்கான் (நடிகர்)

நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டது. இந்தியாவில் சகிப்புத்தன்மை இல்லையென்று ஒரு போதும் பேசவில்லை. நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு தவறாக கட்டமைக்கப்பட்டு திரித்து வெளியிடப்பட்டு விட்டது. அதன் காரணமாக பின்விளைவுகளை எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டேன். என்னிடம் நாட்டில் அதிகரித்து வரும் சகிப்பின்மை குறித்து கேள்வி கேட்கப்பட்ட போது, நான் அந்த விஷயம் குறித்து பேச விரும்பவில்லை. ஆனால் இளைய சமுதாயம் ஒருங்கிணைந்து இது போன்ற விஷயங்களை தவிர்த்து விட்டு நாட்டை ஜனநாயக ரீதியில் முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றுதான் கூறினேன்.

 ராகுல் காந்தி (காங்கிரஸ் துணைத்தலைவர்)

ராகுல் காந்தி (காங்கிரஸ் துணைத்தலைவர்)

மத்திய அரசைப் பற்றியோ, மோடியைக் குறித்தோ கேள்வி எழுப்பினால் அவர்கள் எல்லாரும் தேசப்பற்று இல்லாதவர்கள், தேசவிரோதிகள், உள்நோக்கம் கொண்டவர்கள் என்று முத்திரை குத்துவதை விட்டு விட்டு, மக்களைப் பாதிக்கக்கூடிய விஷயங்களை, அவர்களை சென்றடைந்து உணர்வதற்கு அரசு முயற்சிக்க வேண்டும்.

கெஜ்ரிவால் (டெல்லி முதல்வர்)

கெஜ்ரிவால் (டெல்லி முதல்வர்)

மக்களிடையே பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்துவதற்கு மத்திய அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். அமீர்கான் கூறியுள்ள ஒவ்வொரு வார்த்தையும் உண்மைதான்.

அனுபம் கெர் (நடிகர்)

அனுபம் கெர் (நடிகர்)

அமிர்கான் பேசியது தவறு. இத்தனை ஆண்டுகள் அவர் பார்க்காத சகிப்பின்மை இந்த ஆறேழு மாதங்களில்தான் தோன்றிவிட்டதா? அவர் மனைவி கிரண் ராவும் இந்தியாவில் பிறந்தவர்தான் என்பதை மறந்துவிட்டாரா? ஆமிர்கானை இந்த நிலைக்கு உயர்த்தியது இதே இந்தியாதான். அப்படியானால் மீதமிருக்கிற 2 மில்லியன் பேரை எங்கே போகச் சொல்வதாக உத்தேசம்... ஆட்சி மாறும் வரை காத்திருக்கச் சொல்வாரா?

பரேஷ் ராவல் (நடிகர்)

பரேஷ் ராவல் (நடிகர்)

நாட்டுப் பற்று மிக்க ஒரு உண்மையான கலைஞன் சோதனையான காலத்தில் நாட்டை விட்டு ஓடிப் போவேன் என்று பேசமாட்டான். இங்கேயே இருந்து பிரச்சினையைச் சமாளிக்க வேண்டும். சீர் செய்ய வேண்டும். ஆமிர் ஒரு போராளி. அவர் இந்த சூழலை மாற்றப் போராட வேண்டும். வாழ்வும் மரணமும் இந்த மண்ணில்தான் இருக்க வேண்டும். பெரும்பான்மை இந்துக்களின் உணர்வுகளைக் காயப்படுத்தும் விதத்தில் அவர்களின் கடவுள்களைக் கிண்டலடித்து எடுக்கப்பட்ட பிகே படத்தை எந்த இந்துவும் எதிர்க்கவில்லை. சூப்பர் ஹிட்டாக்கி கோடிகளைக் கொட்டிக் கொடுத்தனர்.

English summary
Aamir Khan's comments on growing intolerance have provoked mixed responses on social networking sites. While several of his industry colleagues have hit out at the actor, some have expresed their support too.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X