For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கெஜ்ரிவாலைவிட, ராக்கி சாவந்த் நன்றாக ஆட்சி செய்வார்: உத்தவ் தாக்கரே- ராக்கி நன்றி!

Google Oneindia Tamil News

Uddhav Thackeray
மும்பை: டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை விட ராக்கி சாவந்த் நன்றாக ஆட்சி செய்வார் என சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே கூறிய கருத்தை ஆதரித்து பேட்டியளித்துள்ளார் நடிகை ராக்கி சாவந்த்.

டெல்லியில் சமீபத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதால், சம்பந்தப் பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், டெல்லி போலீஸ் நிர்வாகத்தை அம்மாநில அரசிடம் ஒப்படைக்கக்கோரியும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது ஆதரவாளர்களுடன் ரயில்பவனில் தர்ணா போராட்டத்தை தொடங்கினார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.

அதனைத் தொடர்ந்து, துணை நிலை ஆளுநரின் வேண்டுகோளின் படி தனது போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டார் கெஜ்ரிவால்.

இந்நிலையில், கெஜ்ரிவாலின் தர்ணா போராட்டம் குறித்து சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே தனது கட்சி செய்தித்தாளில் கடுமையாக விமர்சித்திருந்தார். அதில், அரவிந்த் கெஜ்ரிவாலை பாலிவுட் குத்தாட்ட நாயகி ராக்கி சாவந்த்துடன் ஒப்பிட்டு எழுதியிருந்தார். ராக்கி சாவந்த், அரவிந்த் கெஜ்ரிவாலைவிட நல்ல ஆட்சி செய்வார் என அதில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து, உத்தவ் தாக்கரேயின் கருத்துக் குறித்து நடிகை ராக்கி சாவந்திடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘உத்தவ்ஜி எது சொன்னாலும் அது சரியானதே. அரவிந்த கெஜ்ரிவால் ஆட்சி செய்வதற்காக மக்கள் ஓட்டு அளித்துள்ளனர். அவர் மக்களுக்காக வேலை செய்ய வேண்டும். அவர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். தெருவுக்கு வரகூடாது. சட்டங்களில் தலையிடக் கூடாது. அவர் என்ன செய்கிறாரோ அது சரியல்ல" எனத் தெரிவித்துள்ளார்.

English summary
Shiv Sena chief Uddhav Thackeray hit out at the Aam Aadmi Party on Friday and termed its dharna in Delhi an 'act of madness'. In a stinging editorial in the party mouthpiece 'Saamana', Uddhav compared AAP to a item girl and said that Rakhi Sawant can govern better than Arvind Kejriwal. Reacting to Thackeray's comments, Rakhi said, “Whatever Uddhavji has said is correct.”
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X