For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

யாரையும் கூப்பிட மாட்டோம்.. மக்கள் மட்டுமே போதும்.. ஆம் ஆத்மியின் அடுத்த அதிரடி

Google Oneindia Tamil News

Recommended Video

    Delhi Assembly Election Result | மனைவிக்கு காதலோடு கேக் ஊட்டிய கெஜ்ரிவால்

    டெல்லி: டெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்கவுள்ள நிலையில் பதவியேற்பு விழாவுக்கு எந்த அரசியல் தலைவரையும், பிற மாநில முதல்வர்களையும் அழைக்கப் போவதில்லை என்று கூறியுள்ளது அக்கட்சி.

    வழக்கமாக இதுபோன்ற பிரமாண்ட வெற்றி பெறும் கட்சிகள் எல்லாம் செய்யும் முதல் வேலை பெரிய பில்டப்போடு பதவியேற்பு விழாவை நடத்துவதுதான். ஆனால் அதிலும் கூட ஆம் ஆத்மி படு எளிமையாக, அடக்கமாக இருப்பது அவர்களிடம் வீழ்ந்த கட்சிகளுக்கு மேலும் சில பாட்டில் ஜெலுசின்கள் தேவைப்படும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.

    பதவியேற்பு விழாவை எளிமையாக நடத்தப் போவதாக அக்கட்சியின் டெல்லி ஒருங்கிணைப்பாளர் கோபால் ராய் கூறியுள்ளார். இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

    காஷ்மீர் டூ குமரி வரை இந்துக்கள்தான்.. காலையிலேயே டிவீட் போட்ட எச்.ராஜா.. குவியும் அதகள கமெண்ட்டுகள்காஷ்மீர் டூ குமரி வரை இந்துக்கள்தான்.. காலையிலேயே டிவீட் போட்ட எச்.ராஜா.. குவியும் அதகள கமெண்ட்டுகள்

    டெல்லி மக்கள் போதும்

    டெல்லி மக்கள் போதும்

    இது முற்றிலும் டெல்லி தொடர்புடையது. டெல்லியின் முதல்வராகவே கெஜ்ரிவால் பதவியேற்கவுள்ளார். எந்த முதல்வரையும், அரசியல் கட்சித் தலைவர்களையும் நாங்கள் பதவியேற்பு விழாவுக்கு அழைக்கப் போவதில்லை. பிப்ரவரி 16ம் தேதி ராம்லீலா மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெறும்.

    தலைவர்கள் வேண்டாம்

    தலைவர்கள் வேண்டாம்

    முற்றிலும் டெல்லி மக்கள் மட்டும் இதில் பங்கேற்பார்கள். மக்கள் முன்னிலையில்தான் கெஜ்ரிவால் 3வது முறையாக முதல்வராக பதவியேற்பார். மக்கள் அவர் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு பாத்திரமாக ஆம் ஆத்மி ஆட்சி தொடரும் என்றார் ராய். இதன் மூலம் பகட்டு, படோடபம் இல்லாமல் சிம்பிளாக மக்களின் முதல்வராக கெஜ்ரிவால் பதவியேற்கவுள்ளார் என்பதை ஆம் ஆத்மி கட்சி தெளிவுபடுத்தி விட்டது.

    3வது முறை

    3வது முறை

    டெல்லி சட்டசபைக்கு பிப்ரவரி 8ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதில் 70 தொகுதிகளில் 62 தொகுதிகளை வென்று பிரமாண்ட வெற்றியைப் பெற்று ஆட்சியை தக்க வைத்தது ஆம் ஆத்மி கட்சி. 3வது முறையாக முதல்வராகியுள்ளார் கெஜ்ரிவால். பிப்ரவரி 16ம் தேதி பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் பாஜகவுக்கு கடந்த தேர்தலை விட கூடுதலாக 5 இடங்கள் கிடைத்தன. அதாவது மொத்தம் 8 இடங்களில் வெற்றி பெற்றது.

    காங்கிரஸ் பரிதாபம்

    காங்கிரஸ் பரிதாபம்

    காங்கிரஸ் கட்சிக்கு இந்த முறையும் தேர்தலில் பெரும் தோல்வியே கிடைத்தது. கடந்த முறை அக்கட்சிக்கு பூஜ்ஜியம் வெற்றிதான் கிடைத்தது. இந்த முறையும் அதுவே கிடைத்தது. அதை விட மோசமாக 63 தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் டெபாசிட் தொகையைப் பறி கொடுத்து பெரும் அவமானத்தையும் சந்தித்துள்ளனர். இந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் கூட காங்கிரஸார் மீளவில்லை.

    English summary
    AAP has said that it will not invite other state cms and political leaders for Arvind Kejriwal oath ceremony.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X