For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஏதோ கரண்ட் ஷாக்குன்னு சொன்னீங்களே.. எப்படி இருக்கு அமித் ஷா ஜி? போஸ்டர் ஒட்டி கலாய்க்கும் ஆம் ஆத்மி

Google Oneindia Tamil News

Recommended Video

    Delhi Assembly Election Result | மாஸாக முன்னிலை வகிக்கும் ஆம் ஆத்மி..

    டெல்லி: இதில் கரண்ட் உள்ளது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா, போட்டோ மீது எழுதி போஸ்டர் அடித்து ஒட்டி கலாய்த்து வருகிறார்கள் ஆம் ஆத்மி தொண்டர்கள்.

    டெல்லி சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் ஒரு மகத்தான வெற்றியை நோக்கி ஆம் ஆத்மி கட்சி பயணித்துக்கொண்டு உள்ளது. இதையடுத்து டெல்லி ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில், ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்கள் ஹோலியைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

    AAPians ask Amit Shah, where is the Current?

    மேளம்-நடனம், ஆடல்-பாடல் தொடர்கிறது. கொண்டாட்டத்தின் மத்தியில், ஆம் ஆத்மி அலுவலகத்தில் ஒரு சுவரொட்டி காணப்படுகிறது, அதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் படம் அச்சிடப்பட்டுள்ளது. இதில் 'கரண்ட் உள்ளது' என்று சுவரொட்டியில் எழுதப்பட்டுள்ளது.

    ஏனெனில் டெல்லியில், ஷாஹீன் பாக் ஒரு தேர்தல் பிரச்சினையாக பாஜகவால் மாற்றப்பட்டது, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் ஆம் ஆத்மி கட்சியைத் தாக்கிபேசினார். ஒரு கூட்டத்தில் அமித் ஷா, 'டெல்லியின் ஈ.வி.எம்களின் பொத்தானை மிகவும் சத்தமாக அழுத்தவும். ஷாஹீன் பாக்கில் மின்சாரம் தாக்கினால் எப்படி அதிருமோ அப்படி அதிர வேண்டும் என அமித் ஷா பேசினார்.

    அமித் ஷா முதல் கபில் மிஸ்ரா, பர்வேஷ் வர்மா உள்ளிட்ட ஒவ்வொரு பாஜக தலைவரும் ஷாஹீன் பாக் போராட்டத்திற்கு ஆம் ஆத்மி கட்சி நிதியுதவி அளித்தது என்று குற்றம்சாட்டினர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது பல கூட்டங்களில் "நீங்கள் ஷாஹீன் பாக் மக்களுடன் இருக்கிறீர்களா அல்லது பாரத் மாதா என்ற முழக்கத்தை எழுப்பியவர்களுடன் இருக்கிறீர்களா என்று தேர்தலில் சொல்ல வேண்டும்" என்று கூறினார்.

    மாடல் டவுன் தொகுதியின் பாஜக வேட்பாளர் கபில் மிஸ்ரா தனது ஒரு ட்வீட்டில் ஷாஹீன் பாக்கை மினி பாகிஸ்தான் என்று அழைத்திருந்தார், அதன்பிறகு தேர்தல் ஆணையமும் அவரது பிரச்சாரத்திற்கு தடை செய்தது. அதே நேரத்தில், பாஜக எம்.பி. பிரவேஷ் வர்மாவும் இந்த போராட்ட நபர்கள் உங்கள் வீட்டிற்குள் நுழைந்து, தாய்மார்கள் மற்றும் சகோதரிகளை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்வார்கள் என்றும் மோசமாக விமர்சனம் செய்து பிரச்சாரம் செய்தார்.

    இருப்பினும், இந்த தேர்தல் முடிவுகளில் பாஜகவின் குற்றச்சாட்டு எடுபடவில்லை. ஷாஹீன் பாக் நகர் அடங்கியுள்ள உள்ள ஓக்லா சட்டமன்றத் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் அமனத்துல்லா கான் வெற்றி பெறும் நிலையில் உள்ளார்.

    English summary
    AAPians ask Amit Shah, Current Laga Kya? with posters.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X