For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆருஷி பெற்றோருக்கு ஆயுள் தண்டனை வழங்கிய சிபிஐ கோர்ட் நீதிபதிக்கு, அலகாபாத் ஹைகோர்ட் கடும் விமர்சனம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

அலகாபாத்: சிறுமி ஆருஷி தல்வார் கொலை வழக்கில் அவரது பெற்றோரை விடுதலை செய்த அலகாபாத் ஹைகோர்ட், சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த மாணவி, ஆருஷி தல்வார் (14), கொலை வழக்கில் அவரது பெற்றோரும், பல் டாக்டர்களுமான, ராஜேஷ் தல்வார், நுாபுர் தல்வாரை விடுதலை செய்து, அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

ஆருஷி தல்வார் கடந்த 2008ல், தன் வீட்டில் கழுத்தறுபட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அதே வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்த நேபாளத்தை சேர்ந்த, ஹேம்ராஜ் என்ற 45 வயது வேலைக்காரர் மீது போலீசாருக்கு சந்தேகப்பார்வை திரும்பிய நிலையில், மறுநாள் காலையில், வீட்டின் மொட்டைமாடியில், ஹேம்ராஜ் கழுத்தறுபட்ட நிலையில் சடலமாக கிடந்தது அதிர்ச்சியை அதிகப்படுத்தியிருந்தது.

அலகாபாத் ஹைகோர்ட் தீர்ப்பு

அலகாபாத் ஹைகோர்ட் தீர்ப்பு

இந்த வழக்கின் விசாரணை, சிபிஐக்கு மாற்றப்பட்டது. 2013 நவம்பர் 26ல், ராஜேஷ் தல்வார் மற்றும் நுாபுர் தல்வாருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அதை எதிர்த்து, இருவரும் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த, அலகாபாத் உயர் நீதிமன்றம், நேற்று தீர்ப்பு அளித்தது. அப்போது ஆதாரங்கள் இல்லாமல், சந்தேகத்தின்பேரில் குற்றவாளிகள் என ஆருஷி பெற்றோரை அறிவிக்க முடியாது ென கூறி அவர்களை விடுதலை செய்தது.

Recommended Video

    ஆருஷி கொலை வழக்கில் பெற்றோர் விடுதலை-வீடியோ
    நீதிபதிக்கு விமர்சனம்

    நீதிபதிக்கு விமர்சனம்

    நீதிபதிகள், பாலகிருஷ்ணா நாராயணா மற்றும் அரவிந்த் குமார் மிஸ்ரா அமர்வு தனது தீர்ப்பில், சிபிஐ நீதிபதியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. டிரையல் நீதிபதி கணித ஆசிரியரை போல நடந்துகொள்ள முடியாது. கணிதத்தில், விடை கிடைக்க சில எண்களை கடனாக பெறுவார்கள். அதுபோல கிரிமினல் வழக்கில் செய்ய முடியாது. ஆதாரங்கள், சாட்சியங்கள், உண்மைகள் அடிப்படையில்தான் வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்.

    யூகத்தின் அடிப்படையில் தீர்ப்பு

    யூகத்தின் அடிப்படையில் தீர்ப்பு

    கீழமை நீதிமன்ற நீதிபதி, தன்னிடமுள்ள விவகாரம் என்ன என்பதை மறந்துவிட்டார். விவகாரத்திற்கு உள்ளேயே பயணிக்கவும் அவர் மறந்துவிட்டார். எந்த தரப்புக்கும் நடந்தது என்ன என்பது தெரியவே செய்யாது என்பது ஒப்புக்கொள்ளப்பட்ட விஷயம்தான். ஆனால், ஒரு யூகத்தின் அடிப்படையில் கீழமை நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது. ஆதாரங்களுக்குதான் நீதிபதி முன்னுரிமை கொடுத்திருக்க வேண்டும்.

    திரைப்பட இயக்குநர்

    திரைப்பட இயக்குநர்

    கீழமை நீதிபதி அதிகப்படியான ஆர்வத்தாலும், சொந்த எமோஷனல்களாலும், நம்பிக்கைகளாலும், தனது கற்பனைகளுக்கு வடிவம் கொடுக்கும் வகையிலும், தண்டனையை அறிவித்துள்ளதாகவே கருதுகிறோம். திரைப்பட இயக்குநரை போல புனைவு கொண்ட கதைகளை மனதளவில் நீதிபதி உருவாக்கிக்கொண்டுள்ளார். ஆதாரங்களை அதன் நிஜ வடிவத்திலேயே நீதிபதி எடுத்துக்கொண்டிருக்க வேண்டும். ஆதாரங்களை நமக்கு ஏற்ப எடுத்துக்கொள்ள கூடாது. இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

    English summary
    The Allahabad High Court on Thursday acquitted Dr Rajesh and Nupur Talwar in the Aarushi-Hemraj murder case. The Division Bench comprising Justices Bala Krishna Narayana and Arvind Kumar Mishra had very strong words for the trial court judge who had convicted the Talwars in the double murder case.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X