For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் இருந்து மீட்கப்பட்ட கேரள பாதிரியார் தாமஸ் உழுனாலில் கொச்சி வருகை!

ஏமனில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட பாதிரியார் தாமஸ் உழுனாலில் கொச்சி திரும்பினார்.

By Suganthi
Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: ஏமனில் ஐ.எஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட பாதிரியார் தாமஸ் உழுனாலில் மீட்கப்பட்டு சொந்த ஊர் திரும்பினார்.

கேரளாவைச் சேர்ந்தவர் பாதிரியார் தாமஸ் உழுனாலில், ஏமன் நாட்டில் அன்னை தெரசா ஆதரவற்றோர் இல்லத்தில் சேவை புரிந்து வந்தார். அவர் பணிபுரிந்து வந்த ஆசிரமத்துக்குள் ஐ.எஸ் தீவிரவாதிகள் புகுந்து கடத்திச் சென்றனர்.

Abducted by ISIS terrorists Father returned to Kochi

இதனையடுத்து, பாதிரியாரை விடுவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மத்திய அரசு எடுத்த நடவடிக்கையினால் கடந்த செப்டம்பர் 11-ந் தேதி தீவிரவாதிகள் பாதிரியாரை விடுவித்தனர்.

தீவிரவாதிகளின் பிடியிலிருந்து விடுபட்ட பாதிரியார் தாம்ஸ் உழுனாலில் வாடிகன் நகருக்குச் சென்று போப் ஆண்டவரைச் சந்தித்தார். மேலும், டெல்லிக்குச் சென்று பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், இணை அமைச்சர் வி.கே.சிங் ஆகியோரையும் சந்தித்துப் பேசினார்.

இந்நிலையில் இன்று காலை பாதிரியார் தாமஸ் உழுனாலில் கொச்சியை வந்தடைந்தர். அப்போது, அவர் கூறுகையில் என்னை மீட்பதற்கக பாடுபட்ட அனைவருக்கும் நன்றி என கூறினார். மேலும் சொந்த வீட்டுக்கு செல்வது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என்றும் தெரிவித்தார்.

English summary
In Emen Orphan organization Kerala Fr. Thomas abducted by ISiS terrorists and now he returned kerala.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X