For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கலாம் ஒன்றும் பெரிய விஞ்ஞானி கிடையாது.. பாக். அணு விஞ்ஞானி ஏ.க்யூ. கான் எரிச்சல் பேச்சு

Google Oneindia Tamil News

டெல்லி: அப்துல் கலாம் ஒன்றும் மாபெரும் விஞ்ஞானி கிடையாது. அவர் எல்லா விஞ்ஞானிகளையும் போல சாதாரண விஞ்ஞானிதான். ஆனால் இந்திய அரசியல்வாதிகள் வாக்கு வங்கிக்காக அவரை பெரிதுபடுத்திப் பேசுகிறார்கள் என்று பாகிஸ்தான் அணு வி்ஞ்ஞானி ஏ. க்யூ. கான் எனப்படும் அப்துல் காதர் கான் கூறியுள்ளார்.

இந்தியாவை அப்துல் கலாமை முன்னிறுத்தி பொக்ரானில் அணு குண்டு சோதனையை நடத்தி உலகை வியக்க வைத்த சமயத்தில் பாகிஸ்தான் பதிலுக்கு கானை வைத்து அணு ஆயுதச் சோதனையை நடத்தியது. ஆனால் அது சீனாவிடமிருந்து கெஞ்சிக் கூத்தாடி பொறிகடலை சைஸுக்கு வாங்கிய குண்டைத்தான் வெடித்து சோதனை நடத்தியதாக டுபாக்கூர் விட்டதாக பின்னர் செய்திகள் வெளியாகின.

Abdul Kalam has no major contribution, says Pak scientist AQ Khan

அதன் பின்னர் அதே பாகிஸ்தான் அரசு, இதே கானை தேசதுரோகம் செய்து விட்டார், நாட்டின் அணு ஆயுத ரகசியங்களை விற்று விட்டார் என்று கூறி கைது செய்து வீட்டுக் காவலிலும் வைத்து அசிங்கப்படுத்தியது.

இந்தச நிலையில் கான், அப்துல் கலாம் குறித்த தனது வயிற்றெரிச்சலை வெளியிட்டுள்ளார் பிபிசிக்கு அளித்த ஒரு பேட்டியில். தொலைபேசி மூலம் அவர் அளித்துள்ள பேட்டியில், கலாம் ஒரு சாதாரண விஞ்ஞானிதான். அவர் பெரிய கண்டுபிடிப்பு எதையும் நிகழ்த்தியதாக எனக்குத் தெரியவில்லை.

அவர் எளிமையான வாழ்க்கையை விரும்பிய சாதாரண விஞ்ஞானி. மிகவும் சாதாரணமான விஞ்ஞானி.

ரஷ்யாவின் உதவியுடன்தான் இந்தியா தனது ஏவுகணைத் திட்டங்களை செயல்படுத்தியது. கலாம் இதற்குக் காரணம் இல்லை.

2002ம் ஆண்டு கலாம் ஜனாதிபதியானதற்கு பாஜகதான் காரணம். அதன் மூலம் முஸ்லீம் வாக்கு வங்கியை தன் வசப்படுத்தலாம் என்பது பாஜகவின் திட்டமாகும் என்று கூறியுள்ளார் ஏ.க்யூ.கான்.

English summary
Abdul Qadeer Khan, Pakistan's well known nuclear physicist said that Dr Abdul Kalam, was an ordinary scientist. AQ Khan made the statement in a telephonic interview with an international media house. Khan is known as father of Pakistan’s nuclear programme. He also said that he couldn’t recall any major contribution made by Dr Kalam in the fields of astro-physics, satellite technology or missile technology.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X