For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேர்தல் முடிவில் பாஜகவிற்கு மாற்றம் ஏற்படுத்தும் ஒடிசா... மேற்குவங்க நிலவரம் என்ன #DeshKaMood

Google Oneindia Tamil News

Recommended Video

    எதிர் கட்சிகளின் கூட்டணி அமைத்தால் பாஜகவிற்கு பின்னடைவு - ஏபிபி சர்வே தகவல்

    டெல்லி : 2019 லோக்சபா தேர்தலில் மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 42 இடங்களை வெல்ல வாய்ப்பு இருப்பதாக ஏபிபி சர்வே கூறுகிறது. ஒடிசாவில் மொத்தமுள்ள 21 இடங்களில் பாஜக 12 இடங்களை வெல்லும் என்று கிழக்கு மாநிலத்தில் பாஜக அதிக இடங்களை வெல்லும் மாநிலமாக ஒடிசா திகழும் என்றும் சர்வே முடிவு சொல்கிறது.

    2018க்கு விடை கொடுக்க நாம் தயாராகிக் கொண்டிருக்கிறோம். சரியாக 60 நாட்களில் 2018 நம்மைவிட்டு பிரியப்போகிறது. அடுத்த ஆண்டு தேர்தல் ஆண்டு, 5 ஆண்டுகால பாஜக ஆட்சி முடிவதால் எப்போது வேண்டுமானால் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்படலாம். 2019ல் எந்தக் கட்சியின் ஆட்சிக் கொடி செங்கோட்டையில் பறக்கப் போகிறது, எந்தெந்தா கூட்டணி வெற்றி வாகை சூடப்போகிறது, எந்தெந்த கட்சிகளின் கூட்டணி மண்ணைக் கவ்வப் போகிறது என்ற பரபரப்பு தேசிய அரசியலில் தொடங்கியுள்ளது.

    ABP survey says orissa is a massive boost for BJP in loksabha elections

    இந்நிலையில் தேசத்தின் மனநிலை என்ற தலைப்பில் 2019 லோக்சபா தேர்தல் வெற்றி யாருக்கு என்று ஏபிபி ஹிந்தி எடுத்த சர்வே முடிவுகளை வெளியிட்டுள்ளத. மாநில வாரியாக வெளியாகியுள்ள சர்வே ரிசல்ட்டில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கோட்டையான மேற்குவங்கத்தில் வெற்றி வாய்ப்பு யாருக்கு சாதகமாக இருக்கிறது என்று சர்வே எடுக்கப்பட்டுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 42 இடங்களை வெல்லக் கூடும் என்றும், பாஜக 9 இடங்களிலும், காங்கிரஸ் 1 இடத்தில் மட்டுமே வெல்லக் கூடும் என்று சர்வே முடிவு சொல்கிறது.

    ஒடிசாவில் பாஜகவிற்கு மிகக்பெரிய பலம் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக சர்வே கூறுகிறது. மொத்தமுள்ள 21 இடங்களில் பாஜகவிற்கு 12 இடங்கள் கிடைக்கும் என்றும் கிழக்கு மாநிலங்களில் பாஜக அதிக இடங்களை வெல்லும் மாநிலமாக ஒடிசா திகழும் என்றும் கருத்துக்கணிப்பு சொல்கிறது. பிஜு ஜனதா தளம் 6 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும் வெல்லக் கூடும் என்று சர்வே முடிவு குறிப்பிடுகிறது.

    English summary
    ABP survey says orissa is a massive boost for BJP in loksabha elections, in Westbengal TMC will score 42 seats and 9 seats for BJP,Congress will win in only one constituency
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X