For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லோக்சபா தேர்தல்.. பீகார், மகாராஷ்டிரா, ம.பி. ராஜஸ்தான் மாநிலங்களில் வெல்லப்போவது யார்? #DeshKaMood

Google Oneindia Tamil News

Recommended Video

    எதிர் கட்சிகளின் கூட்டணி அமைத்தால் பாஜகவிற்கு பின்னடைவு - ஏபிபி சர்வே தகவல்

    டெல்லி: நாடாளுமன்றத் தேர்தல் இன்று நடைபெற்றாலும் பீகார், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் பாஜகவே வெல்லும் என ஏபிபி சர்வே முடிவுகள் கூறியுள்ளன.

    அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள பாஜகவும் ஆட்சியை பிடிக்க காங்கிரஸும் போராடி வருகின்றன.

     ABP Suvery says that BJP will win in Bihar and Maharastra

    இதையடுத்து பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி அணி திரட்டி வருகிறது. மற்ற கட்சிகளும் பாஜகவை வீழ்த்த வேண்டும் என துடித்துக் கொண்டிருக்கின்றனர்.

    இந்நிலையில் மக்களின் மனநிலை என்ற பெயரில் ஏபிபி செய்தி நிறுவனம் ஒரு சர்வேயை எடுத்துள்ளது. அதில் நாடாளுமன்றத் தேர்தல் இன்று நடந்தால் எந்த மாநிலங்களில் எந்த கட்சி வெற்றி பெறும் என்பது குறித்து சர்வே எடுக்கப்பட்டுள்ளது.

    அதன் படி பீகாரில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் இன்று வந்தால் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி 34 இடங்களிலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி 6 இடங்களிலும் வெற்றி பெறும் என கூறியுள்ளது.

    அதுபோல் மகாராஷ்டிராவிலுள்ள 48 தொகுதிகளில் பாஜக 23 தொகுதிகளை வெல்லும் என்றும் காங்கிரஸ் கட்சி 14 இடங்களிலும் சிவசேனா 5 இடங்களிலும் தேசியவாத காங்கிரஸ் 6 இடங்களிலும் வெற்றி பெறும் வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    மத்திய பிரதேசத்தில் மொத்தமுள்ள 29 இடங்களில் பாஜக 22 இடங்களில் வெல்லும். காங்கிரஸ் கட்சிக்கு 7 இடங்கள் கிடைக்கும். ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தமுள்ள 25 இடங்களில் 17 இடங்களில் பாஜகவுக்கும் 8 இடங்கள் காங்கிரஸுக்கும் கிடைக்கும் என சர்வே முடிவுகள் கூறுகின்றன.

    மகாராஷ்டிரத்தில் மொத்தம் 48 இடங்களில் பாஜக கூட்டணியில் சிவசேனை இணைந்தால் 28 இடங்களிலும் காங்கிரஸ் கூட்டணியில் இணைந்தால் 20 இடங்களில் வெற்றி பெறும்.

    English summary
    In Bihar if General elections are held today then in Bihar and Maharastra BJP will win.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X