For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இட்லின்னு சொன்னா சட்னி கூட நம்பாது.. ஆர்எஸ்எஸ் மாணவ அமைப்பின் மாணவர் அளித்த பொய்யான ஆவணம்!

டெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்க தலைவராக தேர்வாகி உள்ள ஏபிவிபி அமைப்பை சேர்ந்த மாணவர் அங்கு பொய்யான சான்றிதழ் அளித்து வெற்றிபெற்றது அம்பலமாகி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    பொய்யான சான்றிதழ் கொடுத்த ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பு

    டெல்லி: டெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்க தலைவராக தேர்வாகி உள்ள ஏபிவிபி அமைப்பை சேர்ந்த மாணவர் அங்கு பொய்யான சான்றிதழ் அளித்து வெற்றிபெற்றது அம்பலமாகி உள்ளது.

    நேற்று முதல்நாள் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தல் முடிவு வெளியானது. இந்த மாணவர் சங்க தேர்தலில் இடதுசாரி அமைப்புகள் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. தற்போது அங்கு மாணவ தலைவராக இடதுசாரிகளின் கூட்டமைப்பை சேர்ந்த என். சாய் பாலாஜி என்ற மாணவர் வெற்றிபெற்றுள்ளார்.

    இந்த நிலையில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவ பிரிவான ஏபிவிபியை சேர்ந்த மாணவர் டெல்லி பல்கலைகழக மாணவர் சங்க தலைவராக தேர்வாகி உள்ளார். இவர் அங்கு பொய்யான சான்றிதழ் அளித்து வெற்றிபெற்றது அம்பலமாகி உள்ளது.

    ஒரு இடம் வெற்றி

    ஒரு இடம் வெற்றி

    ஜேஎன்யூ மாணவ தேர்தலில் முக்கிய இடங்களில் எல்லாமும் ஏபிவிபி அமைப்பு தோல்வி அடைந்திருக்கும் நிலையில், டெல்லி பல்கலையில் மட்டும் அந்த அமைப்பு வெற்றி பெற்றுள்ளது. அங்கு மாணவ சங்க தலைவராக ஏபிவிபியை சேர்ந்த அங்கீவ் பஸோயா வெற்றி பெற்றுள்ளார். இவர் தமிழ்நாடு திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் படித்தவர் என்று கூறப்படுகிறது.

    பொய்

    பொய்

    இந்த நிலையில் இவர் பொய்யான சான்றிதழை கொடுத்து கல்லூரியில் சேர்ந்துள்ளார். இவர் இளங்கலை பட்டம் படிக்கவே இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. இவர், திருவள்ளுவர் பல்கலைக்கழத்தில் படிக்கவே இல்லை என்றும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இருந்தது.

    ஆமாம்

    ஆமாம்

    இந்த நிலையில் திருவள்ளுவர் பல்கலைக்கழகமும் இதை உறுதி செய்துள்ளது. ஆம், இவர் அந்த பல்கலையில் படிக்கவில்லை என்று, பல்கலை நிர்வாகவே உறுதி செய்துள்ளது. அவர் அளித்து இருக்கும் ஆவணங்கள் பொய்யானது என்றும் பதில் அளித்துள்ளது.

    இட்லின்னு சொன்னா

    இந்த நிலையில் ''இதை இட்லின்னு சொன்னா சட்னி கூட நம்பாது'' என்ற வசனத்திற்கு ஏற்றபடி, திருவள்ளுவர் என்ற பெயரே இதில் தவறாக எழுதப்பட்டுள்ளது. தமிழில் எழுத முடியாத, தவறான எழுத்துருவில் இந்த ஆவணம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பான ஏபிவிபி சர்ச்சையில் சிக்கி உள்ளது.

    English summary
    eng summary - ABVP Fraud: Delhi University Student Union Chairman gave fake certificates.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X