For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஏமாற்றிவிட்டீர்கள்.. உங்களுக்கு கங்கை தேவையில்லை.. மரணத்திற்கு முன் அகர்வால் மோடிக்கு எழுதிய கடிதம்

கங்கைக்காக உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த பிரபல சமூகவியலாளர் பேராசிரியர் ஜிடி.அகர்வால் பிரதமர் மோடிக்கு எழுதிய கடைசி கடிதம் குறித்த விவரம் வெளியாகி உள்ளது.

Google Oneindia Tamil News

டேராடூன்: கங்கைக்காக உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த பிரபல சமூகவியலாளர் பேராசிரியர் ஜிடி.அகர்வால் பிரதமர் மோடிக்கு எழுதிய கடைசி கடிதம் குறித்த விவரம் வெளியாகி உள்ளது.

கடந்த இரண்டு நடக்களுக்கு முன் பிரபல சமூகவியலாளர் பேராசிரியர் ஜிடிஅகர்வால் தொடர் உண்ணாவிரதம் காரணமாக ஹரித்வாரில் மரணம் அடைந்தார். இவர் கங்கை நதியை சுத்தம் செய்ய வேண்டும் என்று இத்தனை வருடமாக போராடி வந்தார்.

இதற்காக அவர் தொடர் உண்ணாவிரதம் இருந்தார். 11 நாட்கள் அவர் உண்ணாவிரம் இருந்தார்.

இறந்தார்

இறந்தார்

உண்ணாவிரதம் காரணமாக உடல்நலம் குன்றிய அவர் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 1.30 மணிக்கு ஹரித்வார் கங்கை கரையில் மரணம் அடைந்தார். சமூகவியலாளர் பேராசிரியர் ஜிடி.அகர்வால் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னலாஜி கான்பூரில் பேராசிரியராக இருந்தவர். அதேபோல் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் இவர் பணியாற்றி இருக்கிறார்.

உண்ணாவிரதம்

உண்ணாவிரதம்

இவர் நீர் மாசுபாடு தொடர்பாக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். கங்கை நதி மாசுபடுவதற்கு எதிராக போராடி வந்தார். இவர் கடந்த ஜூன் 22ம் தேதி உண்ணாவிரதம் செய்ய தொடங்கினார். கங்கையை சுத்தம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து உண்ணாவிரதம் இருந்தார். 111 நாட்கள் இவர் உண்ணாவிரதம் இருந்துள்ளார்.

பெரிய ஏமாற்றம்

பெரிய ஏமாற்றம்

இந்த நிலையில் அவர் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தின் விவரம் வெளியாகி உள்ளது. அதில், கங்கை நதியை சுத்தம் செய்வதில் பிரதமர் மோடி வேகமாக இருப்பார் என்று நினைத்தேன். எல்லோருக்கும் முன் முதல் அடி எடுத்து வைப்பார் என்று நினைத்தேன். நீங்களும் இதற்காக தனி அமைச்சரவையை கூட உருவாக்கினார்கள். ஆனால் அதற்கு பின் எதுவுமே செய்யவில்லை. அப்படியே எல்லோரையும் போல ஏமாற்றிவிட்டீர்கள்.

ஆதாயம்

ஆதாயம்

இவ்வளவு நாள் நீங்கள் இதை வைத்து அரசியல்தான் செய்துள்ளீர்கள். கங்கையை சுத்தம் செய்ய நீங்கள் நினைக்கவே இல்லை. ஆனால் அதில் இருந்து வந்த அரசியலை ஆதாயங்களை மட்டுமே பெற்று இருக்கிறீர்கள். உங்கள் கங்கை வேண்டாம், ஆனால் அதன் அரசியல் வேண்டும். தயவுகூர்ந்து உங்களுக்கு அரசியலுக்கு பயனளிக்கும் கங்கையை கொஞ்சம் சுத்தம் செய்யுங்கள் என்றுள்ளார். இந்த கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

English summary
111 days of fasting: IIT Professor Activist GD Agarwal dies for Ma Ganga.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X