For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் கமல் திடீர் சந்திப்பு.. அரசியலை கற்க வந்ததாக பேட்டி

By Veera Kumar
Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராய் விஜயனுடன் நடிகர் கமல்ஹாசன் இன்று திடீரென சந்தித்து பேசியதோடு அவருடன் ஓணம் விருந்து சாப்பிட்டார்.

கமல்ஹாசன் சமீபகாலமாக அரசியல் கருத்துக்களை பேட்டிகளிலும், பிக்பாஸ் நிகழ்ச்சியிலும், டிவிட்டரிலும் பேசி வருகிறார்.

தமிழகத்தில் எல்லா துறைகளிலும் ஊழல் மலிந்து விட்டது என்று கூறியது தமிழக அமைச்சர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை உருவாக்கியது. கமலுக்கு பல அமைச்சர்கள் பதில் அளித்து பேட்டியளித்தனர்.

கேரள பயணம்

கேரள பயணம்

இந்நிலையில் கமல் நேற்று இரவு கேரளா சென்றார். இன்று அம் மாநில முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து பேசினார். தொடர்ந்து கமலுக்கு முதல்வர் வீட்டிலேயே இன்று மதிய விருந்து சாப்பிட்டார்.

கமல் பேட்டி

கமல் பேட்டி

இதுகுறித்து கமல் நிருபர்களிடம் பேசுகையில், கடந்தத வருடம் ஓணத்தின்போதே முதல்வரை சந்திப்பதாக இருந்தது. சிறு விபத்தில் நான் அப்போது சிக்கிக்கொண்டதால் பங்கேற்க முடியவில்லை. எனவே இந்த வருட ஓணத்திற்கு வந்துள்ளேன் என்றார்.

அரசியல் டூர்

அரசியல் டூர்

மேலும், தமிழக அரசியலுக்கு கேரள அரசியலில் இருந்து ஏதாவது பாடத்தை கற்க முடியுமா என்ற ஆர்வத்தில் இதை ஒரு அரசியல் சுற்றுலா போலவும் மேற்கொண்டுள்ளேன். இங்கு சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது என்றார் கமல்.

அரசியல் ஆலோசனை

அரசியல் ஆலோசனை

கமல் தெரிவித்து வரும் கருத்துக்கள் இடதுசாரி சிந்தனகள் கொண்டதாகவே இருந்து வருகிறது. கேரளாவில் இடதுசாரி ஆட்சி நடைபெறுகிறது. எனவே கேரள முதல்வருடனான கமல் சந்திப்பில் அரசியல் விவகாரங்கள் குறித்து பேசப்பட்டிருக்கலாம், தனது அரசியல் பிரவேசம் குறித்து பினராயி விஜயனிடம் கமல் ஆலோசித்திருக்கலாம் என்றெல்லாம் யூகங்கள் வெளியாகியுள்ளன.

மலையாளி என்றவர் கமல்

மலையாளி என்றவர் கமல்

பிரான்ஸ் அரசின் உயரிய 'செவாலியே' விருதை தமிழில் சிவாஜிக்குப் பிறகு கமல்ஹாசன் வாங்கியிருந்தார். இதற்காக ஒட்டுமொத்த திரை உலகமும் அவரை கொண்டாடியது. அதே நேரத்தில் பிரதமர் மோடி, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோர் கமல்ஹாசனுக்கு வாழ்த்து கூறவில்லை.ஆனால் பினராயி விஜயன் வாழ்த்தியிருந்தார். அப்போது தான் ஒருமலையாளி என்றும், தனது முதல்வர் பினராயி விஜயன் என்றும் கமல் குறிப்பிட்டு நன்றி கடிதம் அனுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actor Kamalhaasan met CM of Kerala and says he wants to learn politics of Kerala.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X