For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு அமோக வரவேற்பு... நடனம் ஆடி நன்றி தெரிவித்த மோகன்லால் #JimikkiDanceChallen

ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு மொழிகளை கடந்து ரசிகர்கள் அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அப்பாடலுக்கு நடிகர் மோகன்லால் நடனம் ஆடியுள்ளார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு டேன்ஸ் ஆடிய மோகன்லால் வீடியோ

    திருவனந்தபுரம்: புகழ்பெற்று வரும் ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு மொழிகளை கடந்து ரசிகர்கள் அளித்து வரும் வரவேற்புக்கு நன்றி தெரிவிக்க அப்பாடலுக்கு நடிகர் மோகன்லால் நடனம் ஆடி அதன் வீடியோவை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துள்ளார்.

    மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் அண்மையில் வெளியான 'வெளிப்பாடிண்டே புஸ்தகம்' படத்தில் இடம்பெற்ற ஜிமிக்கி கம்மல் பாடல் இணையத்தில் வைரலானது.

    கேரள எல்லையைத் தாண்டி தமிழகம், ஆந்திரா, மகாராஷ்டிரா என பல மாநிலங்களிலும் ஜிமிக்கி கம்மல் பாடல் பெரும் வரவேற்ப்பைப பெற்றது. மேலும் கடல் கடந்து அமெரிக்காவில் பிரபல டாக் ஷோ தொகுப்பாளர் ஜிம்மி கிம்மல் கூட ஜிமிக்கி கம்மல் பாடல் தன்னை கவர்ந்துவிட்டதாகக் கூறியிருந்தார்.

     யார் பாடியது?

    யார் பாடியது?

    'வெளிப்பாடிண்டே புஸ்தகம்' படத்தில் இப்பாடலை வினீத் ஸ்ரீநிவாசன், ரஞ்சித் உன்னி ஆகியோர் பாடியுள்ளனர். இப்பாடலுக்கு, ஓணம் பண்டிகையின்போது கல்லூரி பேராசிரியர் ஷெரில் தனது சக தோழிகளுடன் நடனமாடினார். அந்த வீடியோவை 1.7 கோடி பேர் இதுவரை பார்த்துள்ளனர்.

     ஒரிஜினலை விட...

    ஒரிஜினலை விட...

    இவர்களின் நடன வீடியோ சினிமாவில் இடம்பெற்ற ஒரிஜினல் பாடலைவிட பிரபலமானது. இந்நிலையில், ஜிமிக்கி கம்மல் பாடல் மொழிகளை கடந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

     மோகன்லால் நடனம்

    மோகன்லால் நடனம்

    இந்தப் பாடலை பெரும் வெற்றியாக்கியதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், 'வெளிப்பாடிண்டே புஸ்தகம்' படக்குழுவினருடன் இணைந்து மோகன்லால் அப்பாடலுக்கு நடனமாடியிருக்கிறார். அந்த வீடியோவை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றமும் செய்துள்ளார்.

    ரசிகர்களுக்கு நன்றி

    அந்த பதிவில் மோகன்லால் கூறுகையில், ஜிமிக்கி கம்மல் நடன சவாலுக்காக ஆடி மகிழ்வித்த அனைவருக்கும் எனது நன்றிகள். ஜிமிக்கி கம்மல் பாடல் உலகம் முழுவதும் பரவி வெற்றி கண்டுள்ளதற்கு காரணம் மொழி கடந்த ரசிகர்களாகிய உங்களது ஆதரவே. இதோ உங்களுக்காக நானும் ஜிமிக்கி கம்மல் சவாலை ஏற்று நடனமாடியிருக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

     7 லட்சம் பேர்

    7 லட்சம் பேர்

    மோகன்லால் வெளியிட்ட வீடியோ சில மணிநேரங்களில் 7 லட்சம் பேர் வரை பார்த்து மகிழ்ந்துள்ளனர். இந்த பாடல் மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளதால் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    English summary
    All languages fans welcomed Jimikki kammal song, to thank fans, Actor Mohanlal dances for that song and uploaded it in his Facebook.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X