For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என்னதான் மகனிடம் லம்போர்கினி கார் இருந்தாலும் பிரபல நடிகரின் தாய்க்கு கை கொடுத்ததே ஈய பாத்திரம்தான்!

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: என்னதான் மகனிடம் லம்போர்கினி கார் இருந்தாலும் பிரபல நடிகர் பிரித்திவிராஜின் தாய்க்கு கை கொடுத்ததே ஈய பாத்திரம்தான்.

கேரளத்தில் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்து வந்தது. கடந்த ஒரு மாதமாக பெய்த மழையால் அங்குள்ள 14 மாவட்டங்களிலும் நீர் சூழ்ந்தது. இதையடுத்து அங்குள்ள அணைகளும் நிரம்பியதால் திறந்துவிடப்பட்டன.

கேரளத்தில் ஆலப்புழா, வயநாடு, பத்தினம்திட்டா, செங்கனூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

தீவிரம்

தீவிரம்

கேரளத்தில் மீட்பு பணிகள் தீவிரமடைந்துள்ளன. எனினும் சில இடங்களுக்கு செல்லும் சாலைகள் அடித்து செல்லப்பட்டுள்ளதால் அங்கு சிக்கியவர்களை சாலை மார்க்கமாக மீட்கும் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

உணவில்லாமல்

உணவில்லாமல்

இதுபோல் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் சிக்கித் தவித்து வரும் மக்களுக்கு உணவும் குடிநீரும் இன்றி அவதிப்படுகின்றனர். பல்வேறு மாநிலங்களிலிருந்து நிவாரண பொருட்களும் அனுப்பப்படுகின்றன. அவை சிறிய ஹெலிகாப்டர் மூலம் நிவாரண முகாம்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

மல்லிகா மீட்பு

மல்லிகா மீட்பு

மலையாள நடிகர் பிரித்திவிராஜின் தாய் மல்லிகா சுகுமாறன் வெள்ளத்தால் சிக்கி தத்தளித்தார். தகவலறிந்த மீட்பு குழுவினர் மல்லிகாவை ஈய பாத்திரத்தின் மூலம் பத்திரமாக மீட்டனர்.

சாலை சரியில்லை

சாலை சரியில்லை

முன்னதாக நடிகர் பிரித்திவிராஜ் லம்போர்கினி கார் ஒன்றை வாங்கினார். இதற்காக சாலை வரிக்கே ரூ.45 லட்சம் செலவு செய்தார். அதை கேரள மாநிலத்தில் இயக்காமல் இருந்தார். இதுகுறித்து மல்லிகாவிடம் கேட்டபோது சாலைகள் தரமாக இல்லாததால் இங்கு லம்போர்கினி காரை உபயோகப்படுத்த முடியாது என்றார். இயற்கை பேரிடரிலிருந்து என்ன தெரிகிறது, மகன் என்னதான் விலை உயர்ந்த காரை வைத்திருந்தாலும் இயற்கை இடர்பாடுகளின் போது ஈய பாத்திரம்தான் கைகொடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

English summary
Malayalam Actor Prithiviraj mother Mallika Sukumaran rescued from kerala flood using a vessel.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X